ஆன்மிகம்

மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்பதால் ஏற்படும் முக்கிய பலன்கள் என்னென்ன தெரியுமா? – Maha Shivaratri 2021

மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து ஞானகுருவான சிவபெருமானை அபிஷேகம் செய்து வணங்கினால் ஏழேழு ஜென்மங்களில் ஏற்பட்ட பாவங்கள் விலகும் என்று ஆன்மீக குருமார்கள் கூறியுள்ளனர்.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.

சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.

அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

மேலும், பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை கொடுத்துவிட்டு வீடு திரும்பவேண்டும்.

லட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி?

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.

அல்லது கோவில்களில் நடைபெறும் நான்கு ஜாம சிவ பூஜையில் கலந்துகொள்ளலாம்.

maha shivaratri 2021

விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்பவர்களுக்கு கர்மவினைகள் நீங்கும். எதுவுமே வாங்கித்தர வசதியில்லையே என்று ஏங்க வேண்டாம். வில்வம் வாங்கிக் கொடுங்கள் பல பிறவிக்கும் புண்ணியம் கிடைக்கும்.

Back to top button