நிவர் புயல் நள்ளிரவில் கரையைக் கடக்கும் – சமீபத்திய நிலவரம் என்ன? – Nivar Cyclone
நிவர் புயலும் (Nivar Cyclone), இலங்கை நிலவரமும்
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவர் புயல் (Nivar Cyclone) தற்போது, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து 220 கிலோமீற்றர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலும் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரதேசங்களுக்கு இடையில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் பிரதேசங்களை அண்மித்து ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றதுநிவர் புயல் சுமார் 120 முதல் 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த புயல் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன், சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம், மணிக்கு 80 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரை வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசையிலிருந்து வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது,குறித்த கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றமையினால், கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பேனர்களை அகற்ற உத்தரவு
நிவர் புயல் (Nivar Cyclone) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நண்பகல் 12 மணிக்குள் பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்’ இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‛நிவர்’ அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, புதுச்சேரியில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுவையில் நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு அளிப்பதுடன், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரி இன்று நற்பகல் திறப்பு
கனமழை காரணமாக இன்று நற்பகல் 12 மணியளவில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.