ஏனையவை
அட வெங்காயத்த தினமும் இப்படி சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே? சூப்பர்ப்பா…
டைப் 2 நீரிழிவு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு இருக்கிறதாம்.
தினமும் நீரிழிவு நோயாளிகளின் உணவில் சிறிது வெங்காயத்தினை எடுத்து கொண்டாலே நலமாக வாழ முடியும்.
அது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
- வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் நீரிழிவு பாதிப்பிற்கு மிகவும் ஏற்றது.
- நார்சத்து உணவுகள் மிகவும் தாமதமாக உடைக்கப்பட்டு, செரிமானம் ஆவதால், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீடும் தாமதமாகிறது.
- நார்ச்சத்து மிக்க உணவுகள் உங்கள் குடல் பகுதியை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது .
- நீரிழிவில் ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படும் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துகிறது. உயர் நார்ச்சத்து உணவுகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது, இதனால் இதய நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொண்டவுடன், இரத்த ஓட்டத்தில் அதன் தாக்கத்தை கணக்கிடுவது க்ளைகமிக் குறியீடாகும்.
- வெங்காயத்தின் க்ளைகமிக் குறியீடு 10 என்பதால், இது நீரிழிவு நோய்க்கு மிகச் சரியான உணவாக கருதப்படுகிறது.
- 55ஐ விட குறைவான க்ளைகமிக் குறியீடு கொண்ட உணவுகள் இரத்த ஓட்டத்தில் மெதுவாக சர்க்கரையை வெளியிடுகிறது.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகமான வைட்டமின் மற்றும் கனிமங்கள் எடுத்துக் கொள்வதால் நன்மை அடையலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
- வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, கே, போலேட், நியாசின் போன்ற ஊட்டச்சத்துகளும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது.
- மெக்னீசியம், ஜின்க், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் வெங்காயத்தில் அதிகமாக உள்ளன.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகமான வைட்டமின் மற்றும் கனிமங்கள் எடுத்துக் கொள்வதால் நன்மை அடையலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
- வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, கே, போலேட், நியாசின் போன்ற ஊட்டச்சத்துகளும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது. மெக்னீசியம், ஜின்க், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் வெங்காயத்தில் அதிகமாக உள்ளன.
இத்தனை மருத்துவ குணம் கொண்ட வெங்காயத்தினை இனி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.