ஆன்மிகம்

இன்று ராகு கேது பெயர்ச்சி! எந்த ராசிக்காரர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும் – Rahu ketu peyarchi 2022

ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு – கேது பெயர்ச்சி என்கிறோம்.  

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.    

கிரகங்களில் சனி பகவானுக்கு பிறகு மெதுவான இயக்கம் கொண்ட கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும்.

அதுமட்டுமின்றி, இந்த கிரகங்கள் எப்போதும் எதிர் திசையில் நகர்வதால், இவற்றின் அசுப நிலை மனிதனின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. 

மேஷம்

இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே ராகு வந்து அமர்வதால் முன்பு இருந்து வந்த பிரச்சினைகளெல்லாம் கொஞ்சம் விலகும்.

ஆரோக்யத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். முன்கோபம் அதிகமாகும். உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.

தற்போது கேது 7-ல் வந்தமர்வதால் கணவன் -மனைவிக்குள் சின்னச் சின்னதான சந்தேகங்கள் வரும்.

முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான எண்ணங்களிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் விலகி இருங்கள்.

கணவன் – மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்த யாராவது முயற்சி செய்வார்கள் அதை நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும்.

மிதுனம்

உங்களுக்கு ராகு பகவான் 12-ம் வீட்டிலிருந்து 11-ம் வீட்டில் உட்கார்ந்து அள்ளித் தரப் போகிறார். இனி நிம்மதியாக இருப்பீர்கள். உங்களின் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபமும், உத்யோகத்தில் பதவி உயர்வும் உண்டு. சொந்த வீடு வாங்குவீர்கள்.

ஆனால் கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள் அவர்களை புரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.

சிம்மம்

கேது பகவான் 3-ம் வீட்டில் அமர்வதால் இனி தைரியம் வரும். முக்கிய முடிவுகளை கூட நீங்களே சொந்தமாக எடுப்பீர்கள்.

உத்தியோகம் விஷயங்களில் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

சொந்த – பந்தங்களுடன் இருந்த மனவருத்தங்கள் விலகும். அம்மாவினுடைய ஆரோக்யமும் நன்றாக இருக்கும்.

9-ல் ராகு இருப்பதால் அப்பாவின் ஆரோக்யத்தில் கவனம் காட்டுங்கள். அப்பா வழி சொந்தங்களுடன் சலசலப்புகள் வரும்.

வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். புதிதாக தொழில் தொடங்க வேண்டாம். 

வாழ்க்கைத் துணைக்கு உடல்நலப் பிரச்சனை வரலாம்.  

துலாம்

உங்கள் ராசிக்குள்ளேயே கேது நுழைந்திருக்கிறார் உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் சங்கடங்கள் வரும்.

உங்கள் வாழ்க்கையில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம். உடல்நலம், நிதி நிலை மற்றும் உறவுகள் பாதிக்கப்படலாம். 

ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். 7-ல் ராகு இருப்பதால் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டால் நிம்மதி போய்விடும். 

உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். சில பிரச்சினைகளால் மனம் சஞ்சலத்துடன் இருப்பீர்கள்.  

மீனம்

அதிக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சொத்தை வாங்கும் முன், அதற்கான ஆவணங்களை நன்றாக படித்துப் பார்க்கவும். வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பை அதிகரிக்கவும்.

எல்லோரிடமும் வெளிப்படையாக இனி பேச வேண்டாம். குடும்பத்தில் அடங்கிப் போக வேண்டி இருக்கும்.

யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். கடையை கொஞ்சம் பெரிதுபடுத்துவீர்கள். கேதுவால் இனந்தெரியாத ஒரு மனக்கலக்கம் இருக்கும்.

சுற்றியிருப்பவர்களின் மறுபக்கத்தை தெரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளிடம் வளைந்து கொடுத்து போகவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.  

Back to top button