செய்திகள்

நீங்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பது கொரோனாவா? தடிமனா? சுயபரிசோதனை செய்யலாம்!

நீங்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தாலும் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள 07 தொடக்கம் 14 நாட்கள் வரை காத்திருப்பது அவசியமாவதுடன் வைத்திய அறிக்கையையும் பெறுவதன் மூலமே முழுமையாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இதற்கு முக்கிய காரணியாக அமைவது கொவிட்19 தொற்றினால் ஏற்படும் அறிகுறிகளும் தடிமன் மற்றும் இன்புளுவன்சாவினால் ஏற்படும் அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பது தான்.

70 சதவீதமான கொரோனா நோயளர்கள் தடிமனுக்கு பொதுவான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொடர்பான உத்தியோகபூர்வ ஆலோசனை என்னவென்றால், உங்கள் உடல்  37.8C க்கு உயர்வான வெப்பநிலையில் இருக்குமானால் (உங்கள் மார்பை அல்லது முதுகை தொடும் போது சூடாக இருக்கும்), அத்துடன் தொடர்ந்து இருமல் இருக்குமானால், நீங்கள் ஏழு நாட்கள் வீட்டிலேயே இருந்து உங்களை தனிமைபடுத்தி கொள்வது சிறந்தது.  அத்துடன் வைத்தியரை அணுகுதல் வேண்டும்.

எனினும் ஆய்வாளர்கள் கொரோனா, தடிமன் மற்றும் இன்புளுவன்சா ஆகிய நோய்களுக்கு இடையில்  உள்ள வித்தியாசத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்டியலிட்டுள்ளனர்.

இது சாதரான ஒருவருக்கு வைரஸ் தொற்று தொடர்பான ஒரு ஊகிப்பை ஏற்படுத்தி கொள்ள உதவுகின்றது. நீங்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பது கொரோனாவா? தடிமனா? சுயபரிசோதனை செய்யலாம்! 1

உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளவதுடன், சுயமாக தனிமைப்படுத்தி கொள்ளுதல் நோய்பரவலை தடுக்க உதவுவதுடன் பல உயிர்களை காக்கும்.

Back to top button