நிகழ்வுகள் தொடர்பான கட்டுப்பாடுகளில் திருத்தம்! – Restrictions in sri lanka
நாட்டில் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை கருத்திற்கொண்டு, இதுவரையில் வழங்கப்பட்டிருந்த அனுமதி சிலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
அதற்கைமய, 500 க்கும் அதிகமான இருக்கைகளைக் கொண்ட மண்டபங்களில் இடம்பெறும் சகல நிகழ்வுகளிலும் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறே 500க்கு குறைந்த இருக்கைகள் கொண்ட மண்டபங்களில் 100 பேர் மாத்திரமே பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.
மேலும் மரண நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் இந்த கட்டுப்பாடுகள் அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.