ஆன்மிகம்

சனி பெயர்ச்சி 2022: இந்த 4 ராசிக்கு இனி தலைவிதி மாறப்போகிறதாம்! என்ன யோகம்? – Sani peyarchi 2022

ஜோதிட சாஸ்திரத்தின்படி சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஏப்ரலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைவார்.

இந்த சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசியினர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

சில ராசிக்கு இந்த பெயர்ச்சியானது அசுபமான பலன்களை தரும். 4 ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு சனி பகவான் மிகவும் சாதகமாக இருக்கப்போகிறார். பண வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல நேரம் இது. வணிகர்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவார்கள். உங்கள் பணிகள் பாராட்டப்படும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் நடந்துமுடியும்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு சனி பெயர்ச்சி பெரிய மாற்றத்தை தர போகிறார். எந்த செயல் செய்தாலும் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய வேலைகள் கிடைக்கும். ஊதிய உயர்வு வருமானம் அதிகரிக்கும். இந்த நேரம் தொழில் மற்றும் பணத்தின் அடிப்படை சிறப்பாக அமையும்.

கன்னி

கன்னி ராசியினர்களுக்கு சனி பகவான் பொருளாதார நிலையை பலப்படுத்துவார். வருமான அதிகமாகும். பல்வேறு வழிகளில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

புதிய வேலையை தொடங்க அல்லது ஆரம்பிக்க இது நல்ல நேரம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் அமையும்.

தனுசு

தனுசு ராசியினர்களுக்கு சனிப்பெயர்ச்சி வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு முடிவுக்கு கொண்டு வர போகிறார். தடைபடிருந்த அனைத்து வேலைகளும் எளிதாக நடக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளக்கூடும். இந்த பயணத்தால், மன அமைதி, மாறுதல், பண வரவு என அனைத்தும் கிடைக்கும். 

Back to top button