ஆசிய நாடுகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ள சீன கோடீஸ்வரன்..!
இலங்கை உட்பட ஆசிய நாடுகளுக்கு கொரோனா தொற்றினை எதிர்த்துப்போராடுவதற்கான மருத்துவ உபகரணங்களையும் உதவிகளையும் வழங்குவதற்கு சீன கோடீஸ்வரரான ஜக் மா முன்வந்து அறிவிப்புச் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக அவசர மருத்துவ உபகரங்களை வழங்குவதற்கு தயாராகியுள்ளோம். அந்த வகையில் 1.8மில்லியன் முகக்கவசங்கள், 36 ஆயிரம் தற்காப்பு உடைகள், 210 ஆயிரம் பரிசோதனை உடைகள், செயற்கை சுவாச இயந்திரங்கள் மற்றும் வெப்பமானிகள் ஆகியவை முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளன.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார், நோபாளம், மியன்மார், கம்போடியா, லாவோஸ், மாலைதீவு, மொங்கோலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கே இவற்றை வழங்குவவதற்கு முயற்சிகள் எடுத்துள்ளதோடு அவற்றை அந்தந்த நாடுகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பது இலகுவானது அல்ல. ஆனால் கடுமையாக முயற்சிக்கின்றோம் என்றுள்ளது.