செய்திகள்

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு : Sri Lanka Police Vacancies 2020

இலங்கை பொலிஸில் காணப்படும் தமிழ் பொலிஸாரின் தேவையை நிறைவேற்றும் முகமாக ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன (sri lanka police vacancies 2020).

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு : Sri Lanka Police Vacancies 2020 1

1800 பொலிஸாரை இணைத்துக்கொள்ளும் பொருட்டு நடத்தப்பட்டவுள்ள ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்படுவோருக்கு சுமார் 67ஆயிரம் வரையான சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகளும் கொடுக்கப்படவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் தேசிய மாணவர் படையணியினால் குறித்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறவுள்ளதுடன் விண்ணப்பதாரர்களது மாகாணங்களிலேயே நேர்முகத்தேர்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை தெரிவு செய்யப்படுபவர்கள் அந்ததந்த மாகாணங்களிலேயே பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக கல்வி நடவடிக்கைகள் வெளிநாட்டு கற்கைகளும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் பொலிஸ் திணைக்களம் வழங்க முன்வந்துள்ளது.

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு : Sri Lanka Police Vacancies 2020 2

இதன் பிரகாரம் 18 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமையினால் அனைத்து இளைஞர் யுவதிகள் குறித்த வாய்ப்பை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை 02.14.2020 திகதி வர்தமானியில் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் மற்றும் www.police.lk என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Sources virakesari.lk

Back to top button