செய்திகள்

வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டரை விநியோகிக்க நடவடிக்கை: எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை – நுகர்வோர் அதிகாரசபை

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை. நுகர்வோருக்கு தேவையான எரிவாயுகளை விநியோக மத்திய நிலையங்கள் ஊடாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் எரிவாயு தீர்ந்துவிட்டால் கேஸ் சிலிண்டைர தங்களின் வீட்டுக்கு கொண்டுவந்து விநியோகிக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடி நாடுபூராகவும் அமைந்திருக்கும் 9 ஆயிரம் விநியோக மத்திய நிலையங்கள் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்க தேவையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நடவடிக்கை மேல்மாகாணத்தில் அனைத்து நுகர்வோருக்கும் இந்த வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் எரிவாயு தட்டுப்பாடு இருக்கும் பிரதேசங்கள் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவின் 0112 2505808 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

Back to top button