முன்கூட்டியே எச்சரித்த புலனாய்வு பிரிவினர்- அலட்சியம் செய்தார் டிரம்ப்- வோசிங்டன் போஸ்ட்
கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா புலாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை ஜனாதிபதி டிரம்ப் அலட்சியம் செய்தார் என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் பரவ ஆரம்பித்துள்ள வைரசின் தீவிரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு புலனாய்வு பிரிவினர் ஜனவரி மாதத்தில் எச்சரிக்கை விடுத்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் வைரசின் இயல்பு மற்றும் சர்வதேச பரவல் குறித்தும் சீனா அதன் பாதிப்பை குறைத்து காண்பிப்பது குறித்தும் அமெரிக்க அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைககள் குறித்தும் எச்சரித்தன ஆனால் வழமைபோல டிரம்ப் அதன்; பாரதூரத்தை அலட்சியம் செய்தார் அதனை நிராகரித்தார் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
டிரம்ப் இதனை எதிர்பார்த்திருக்கமாட்டார் ஆனால் அவரது நிர்வாகத்தை சேர்ந்த பலர் இதனை எதிர்பார்த்தனர் அவர்களால் டிரம்பை எதனையும் செய்யவைக்க முடியவில்லை என அதிகாரிகளை மேற்கோள்காட்டி போஸ்ட் தெரிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரசின் புலனாய்வு குழுவினரிற்கு வைரஸ் ஆபத்து குறி;த்து ஜனவரி பெப்ரவரியி;ல் விளக்கமளிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
புலனாய்வு அறிக்கைகள் வைரஸ் அமெரிக்காவை தாக்கும் என எதிர்வு கூறவில்லை,என்ன நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பரிந்துரைகளை முன்வைக்கவில்லை ஆனால் சீனாவிலும் ஏனைய நாடுகளிலும் வைரசின் வேகம் குறித்து தெரிவித்திருந்ததுடன் சீன அதிகாரிகள் தாக்கத்தின் அளவை குறைக்கின்றனர் என குறிப்பிட்டன எனசில வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.