செய்திகள்

85 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசின் அதிரடி நடவடிக்கை!

தேக்கமடைந்திருக்கும் ஆஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலிப்பதற்காக 9 மில்லியன் டொலர் நிதியை செலவு செய்து கடந்த எட்டு மாதங்களில் சுமார் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் தொடர்பாக முடிவெடுத்திருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
ஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் புதிய ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டதைத்தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நடுப்பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் குடிவரவு அமைச்சில் தேக்கமடைந்திருந்தன.
2017ம் ஆண்டு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 750 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டபோதும் 2018-இல் 80 ஆயிரத்து 649 பேருக்கு மாத்திரமே குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது.
யிரக்கணக்கில் அதிகரித்துச்சென்ற இந்த குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பாகவும் இதுதொடர்பில் குடிவரவு அமைச்சு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக விமார்சனங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் – மேலதிக அலுவலர்களை பணிக்கு அமர்த்தி தேக்கமடைந்திருக்கும் விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
இதன் பிரகாரம் புதிதாக உள்வாங்கப்பட்ட அலுவலர்களின் துரித பணியினால் கடந்த எட்டு மாதங்களில் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் தொடர்பாக சாதகமாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இன்னும் எத்தனை குடியுரிமை விண்ணப்பங்கள் தேக்க நிலையில் இருக்கின்றன என்ற எண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை

85 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசின் அதிரடி நடவடிக்கை! 1

Back to top button