ஆன்மிகம்

கும்ப ராசிக்கு செல்லும் செவ்வாய்! இரண்டு நாளில் 5 ராசிக்கு அதிர்ஷ்ட காலம்

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் 2022 ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன் உள்ளார்.

கும்ப ராசியில் செவ்வாய் சென்றதும், அவர் சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பார். இந்த ராசியில் செவ்வாய் 2022 மே 17 ஆம் தேதி வரை இருந்து பின் மீன ராசிக்கு செல்வார்.

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். மேலும் இவர் வலிமை, தைரியம், வீரியம் மற்றும் உயிர்சக்தியின் ஆதாரமாக கருதப்படுகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் எப்போதும் ஆற்றல் மிக்கவராகவும், அனைத்து துறைகளிலும் வெற்றியாளராகவும் இருப்பார்.

இந்நிலையில் செவ்வாய் கும்ப ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது கும்பம் செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆசை மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது மிகவும் பயனுள்ள காலமாக இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வெற்றி பெற நன்கு திட்டமிடுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவடையும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். திருமண வழ்க்கை மேம்படும்.

இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களை நிரூபிக்க பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். கூடுதலாக, வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள். கடின உழைப்பால் தடைகள் அனைத்தும் நீங்கும்.

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சம்பள உயர்வுடன், முதலீடும் நல்ல லாபத்தைத் தரும். இருப்பினும், எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

நிதியைப் பொறுத்தவரை, இக்காலத்தில் முதலீடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். இக்காலத்தில் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலன் முழுமையாக கிடைக்கும். அனைத்து பணிகளிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

எதிரிகள் உங்களை துன்புறுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும், அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வருவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விவகாரங்கள் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சமூகத்தில் புகழைப் பெறுவார்கள். சமய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவவும், தொண்டு நடவடிக்கைகளில் நேரத்தை செலவிடவும் எப்போதும் தயாராக இருப்பார்கள்.

வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இக்காலத்தில் நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பைப் பெற்று வேலைகளை வெற்றிகரமான செய்து முடிப்பீர்கள். 

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இது சாதகமான காலம். உங்கள் திறமையால் இக்காலத்தில் எதிலும் வெற்றி பெறுவார்கள்.

மேலும இக்காலத்தில் வணிக பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் செய்யும் ஒவ்வொரு முதலீடும் பயனளிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். 

Back to top button