ஆன்மிகம்

குருவின் அருளால் செல்வத்தின் அதிபதியாக திகழும் அந்த 3 ராசியினர்கள் யார்?

குரு கிரகங்களில் பெரியவரான குரு பகவான் நமது வாழ்க்கையின் சுகத்தையும், கஷ்டத்தையும் தீர்மானிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் சிறப்பம்சமே, எந்த ஒரு கிரகமும் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரே மாதிரியான செல்வ பலன்களைத் தருவதில்லை என்பது தான்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு மீன ராசியில் இருக்கும் குரு அதீத அதிர்ஷ்டத்தைத் தர காத்துக் கொண்டிருக்கிறார். வியாழனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடும்.

ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தும் குரு, புதிய வருமானத்திற்கான வழிகளை காட்டுவார்.

மேலும், ரிஷப ராசிக்காரர்களில் தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். பணி செய்பவர்களுக்கும் வேலையிடத்தில் பாராட்டுகள் குவியும்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு வியாழன் பெயர்ச்சி அவர்களின் தொழிலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நிலைமை சாதகமாக இருக்கும்.

குறிப்பாக சந்தைப்படுத்தல், ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் பெரிய பலனைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசியினர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையும் அருட்பார்வை அதிகரித்துவிட்டது. இதற்கு காரணம் குருவின் அருட்கடாட்சம் தான்.

கடக ராசிக்காரர்கள் தடைகள் நீங்கும். வெளிநாட்டில் இருந்து அதிக லாபம் கிடைக்கும்.

கடக ராசி வியாபாரிகளுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். சாப்பாடு, பானங்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அதிக லாபம் ஈட்டலாம்.

அடுத்து, நாள்பட்ட நோய் முடிவுக்கு வந்து ஆரோக்கியத்துடன் செல்வத்தை அனுபவிக்கும் யோகத்தை குரு பகவான் கடக ராசியினருக்கு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

Back to top button