ஆன்மிகம்

குரு பெயர்ச்சி 2020: அஷ்டம குருவினால் மிதுன ராசிக்கு உச்சக்கட்ட பேரதிஷ்டம்

குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு குரு அஷ்டமத்து குருவாக எட்டாம் வீட்டில் அமரப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது. அஷ்டம குரு என்று அஞ்சத்தேவையில்லை. இந்த குரு பெயர்ச்சியினால் கஷ்டங்கள் காணமல் போகப்போகிறது. கவலைகள் நீங்கி குடும்பத்தில் குதூகலம் ஏற்படப்போகிறது.

களத்திர காரகன் குரு எட்டாம் வீட்டிற்குப் போகப்போகிறார். சுப கிரகம் பொதுவாகவே மறையக்கூடாது. இங்கே குரு நீச்சமடைந்து மறைந்தாலும் ஆட்சி பெற்ற சனியோடு இணைப்போகிறார். கஷ்டங்கள், சிக்கல்கள் தீரப்போகிறது. செய்யப்போகும் காரியத்தை நிதானமாக செய்யவும். சின்னச் சின்ன தடைகள் வந்தாலும் உங்களின் சுய ஜாதகத்தின் படி குரு நல்ல நிலையில் இருந்தால் பாதிப்புகள் நீங்கும். உங்களுக்கு சனி தசை, குரு தசை, சுக்கிரதசை நடைபெறும் பொழுது பாதிப்புகள் நீங்கும்.

கடன் பிரச்சினை நீங்கும், வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. இருக்கிற வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போக முடிவெடுக்க வேண்டாம். எந்த செயலை செய்யும் போது எச்சரிக்கை தேவை.

குரு பார்வையால் பலன்

ஏழாம் வீட்டில் சம சப்தமமாக இருந்து உங்க ராசியை பார்த்து வந்தார் குரு பகவான். அஷ்டம குரு நீச்சமடைந்து சஞ்சரிக்க அஷ்டம சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் அதிஷ்டமும் நிம்மதியும் தேடி வரும். குருவின் பார்வை மகரம் ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. மிதுனம் ராசிக்கு இந்த பார்வை 12,2, 4ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் பார்வையால் உங்க ராசிக்கு யோகங்கள் கிடைக்கப் போகிறது.

மதிப்பு மரியாதை கூடும்

குருவிற்கு கண்டக சனி, களத்திர குரு , ராகு கேது என பல பிரச்சினைகள் சந்தித்தீர்கள். இப்போது அஷ்டமத்து சனி, அஷ்டமத்து குரு என எட்டாம் வீட்டில் இணைகிறது. குரு இரண்டாம் வீட்டில் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன உளைச்சல்கள் முடிவுக்கு வரும். வாக்கு ஸ்தானத்தில் குருவின் பார்வை விழுவதால் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். பண வருமானம் அதிகமாகும். வேலை தொழிலில் புதிய புரமோசன் கிடைக்கும்.

புது வீடு கட்டலாம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் வீட்டில் சிக்கல்கள் நீங்கும். சனி பார்வையால் பாதிப்பை சந்தித்து வந்த உங்களுக்கு இனி நிம்மதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் விலகும். சிலர் புது வீடு கட்டும் யோகம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வண்டி வாகனங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சிக்கல்கள் நீங்கும்

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் அதிகமாக வந்தாலும் சில விரைய செலவுகளும் வரலாம் எனவே வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள். ஏழாம் வீட்டில் சனி குரு, கேது என சஞ்சரிக்க காலத்தில் திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய தடை ஏற்பட்டது. திருமண வாழ்க்கையில் கருத்துவேறுபாடு, காதல் முறிவு, மண முறிவு என சிக்கல்களை சந்தித்தது. அப்பா உடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.

நிதானம் அவசியம்

12ஆம் வீட்டினை குரு பார்வையிடுவதால் உங்களுக்கு இருந்த உறக்கம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீண் பழி, அவப்பெயரை ஏற்படுத்தும் கவனமும் பொறுமையும் தேவை. அறிமுகமில்லாதவர்களை நம்பவேண்டாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. உங்களைப்பற்றிய ரகசியங்களை காக்கவும். ஆணோ, பெண்ணோ எச்சரிக்கையாக இருக்கவும்.

கவனமும் பரிகாரமும்

அஷ்டம சனியும் அஷ்டம குருவும் இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை, பணம் விவகாரங்கள், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு தேவையில்லை. பொறுமை தேவை. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பொறுமையும் நிதானமும் தேவை. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி குரு பெயர்ச்சி யாகங்களில் பங்கேற்கலாம். பாதிப்புகள் குறையும்.

 

Back to top button