ஆன்மிகம்

தமிழ்புத்தாண்டு பலன்கள்… கன்னி சுபகிருது தரும் அதிர்ஷ்டமான பலன்கள் என்ன?

சுபகிருது புத்தாண்டு வருவதற்குள் ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 12, குரு பெயர்ச்சி ஏப்ரல் 13, சனி அதிசார பெயர்ச்சி ஏப்ரல் 29 என மூன்று முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழ்வது, ஒவ்வொரு ராசியினருக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், கன்னி ராசிக்கு சுபகிருது தமிழ் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன் தரும் பார்ப்போம்…

கன்னி ராசியினர் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மித வேகமும், எச்சரிக்கையுடனும் செல்லவும்.

நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று வேலையை செய்யவும். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். சிறப்பு பலன்கள் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், பண வரவுகள் வரக்கூடும். நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சிலர் உங்கள் பெயரில் உயில் எழுதி வைத்திருக்க வாய்ப்புள்ளது.

சிலருக்கு குரு, மகான்களின் தரிசனம் கிடைக்கும். வெளிநாடு, வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. குடும்பத்தில் சஞ்சலங்கள் இருந்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது.

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்து கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் வீண் பேச்சைத் தவிர்க்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்திச் செய்யக்கூடிய எந்த ஒருசெயலும், பேச்சு வார்த்தையும் சுபத்தில் முடியும்.

பரிகாரம்

குலதெய்வ வழிபாடு செய்வதும், சிவ பெருமான் வழிபாடு நல்லது.  

Back to top button