சினிமா
ஆல்யா மானசாவுக்கு குழந்தை பிறந்தது!.. என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஆல்யா மானசா.
அதே தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்துக்கு ஆல்யாவின் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.
இருந்த போதும் சஞ்சீவ் குடும்பத்தினர், நண்பர்கள் வாழ்த்த இனிதே திருமணத்தை நடத்தி முடித்தி வாழ்க்கையை தொடங்கினர்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யாவுக்கு நடந்த வளைகாப்பில் அவரது அம்மாவுக்கு பங்கேற்று மகளை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கடித்தார்.
தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும்- சேயும் நலமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார் சஞ்சீவ்.