விளையாட்டு

இந்தியா vs வங்கதேசம்: இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்கும் ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைப்பெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

இரண்டு வருடம் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஒருநாள் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 2017ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது.

அந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா டக்வொர்த் லூயிஸ் முறையில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்று நிதானமாக விளையாட முடியும் என்றாலும், இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வருகிறது. ஆனால் வானிலை மையத்தின் அறிவிப்புபடி ஞாயிறன்று மழைபெய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இதற்கு அடுத்த இரண்டு ஒருநாள் போட்டி டிசம்பர் 18 விசாகப்பட்டினத்திலும் மற்றும் டிசம்பர் 22 கட்டாகிலும் நடைப்பெறவுள்ளது.

இரண்டு ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டி சென்னையில் நடப்பதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

Back to top button