ஓட்டிங் முடிந்தது வெற்றியாளர் இவர்தான்! பிக் பாஸ் கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் இருக்கும் தர்ஷன்… லீக்கான புகைப்படம்
பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று தான் கடைசி நாள் என்பதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், லொஸ்லியாதான் வெற்றியாளர் என்ற தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இதனை பார்த்த இலங்கை ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டார். இது எந்த அளவு உண்மை தன்மையான தகவல் என்பது தெரிய வில்லை. மக்களின் கருத்து கணிப்பு பலிக்குமா என்பது நாளை தான் தெரியும்.
இதேவேளை, இறுதி போட்டியில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vijay Television
✔@vijaytelevision
#Day104 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision
இந்த நிலையில் முகேனின் குடும்பத்துடன் தர்ஷன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், அந்த புகைப்படத்திற்கு பின்னால் மோகன் வைத்யாவும் அவரது சகோதரரும் இருக்கிறார். ஷாக்க்ஷியும் தர்ஷனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
எனவே, இறுதி போட்டிக்கான கொண்டாட்டத்தில் அணைத்து பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.