செய்திகள்
கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம் – கோவையில் பரபரப்பு
கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி கட்டிடடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் அரசு மருத்துவ கல்லூரிக்கு எதிரே செயல்பட்டுவரும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கட்டிடத்தின் மேல் தளத்தில் சிமெண்ட் கொண்டு கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் உள்பட10க்கும் மேற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
[better-ads type=”banner” banner=”4241″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”1″][/better-ads]
அருகில் இருந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளபட்டு வருகிறது.
[better-ads type=”banner” banner=”4241″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”1″][/better-ads]
மேலும் இந்த சம்பவம் குறித்து பீளமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலை அடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கட்டிட விபத்தை பார் விட்டது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் திரும்பிச் சென்றனர் மேலும் கல்லூரி நிர்வாகத்தினர் தங்களது பணியாளர்களைக் கொண்டு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.