சினிமா

காதலி மற்றும் குழந்தையுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்றதுடன், டைட்டிலையும் தட்டிச் சென்றவர் தான் மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ்.

சிறுவயதிலிருந்தே முகேன் பல கஷ்டங்களை சந்தித்து வந்ததால் பெரிதாக அன்பினை அவர் ருசித்து பார்த்ததில்லை என்று பலமுறை அவரே கூறியிருந்தார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெற்றி மகனாக வெளியே வந்த அவருக்கு இந்தியா மட்டுமல்ல மலேசியா ரசிகர்கள் என அவரை அன்பு மழையினால் நனைய வைத்தனர்.

முகேன் காதலித்து வரும் பெண் நதியா என்று ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் தனது காதலியுடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து, கையில் குழந்தை ஒன்றினை வைத்து மிகவும் மகிழ்ச்சியாக காணப்படும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

இதனை அவதானித்த ரசிகர்கள், ஒரு குழந்தை கையில் இன்னொரு குழந்தையா? என்றும் வேறு எதும் படத்தில் கமிட் ஆகியுள்ளீர்களா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்துள்ளனர்.

காதலி மற்றும் குழந்தையுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க! 1

Mugen Rao@Mugen_Rao_Offl

Kids are ??♥️#MugenRao

View image on TwitterView image on Twitter

View image on Twitter

Back to top button