சினிமா

கொரோனா வைரஸ்: நடிகர் அஜித் வழங்கிய நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், சினிமாத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் பலரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு சினிமாத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

வீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ ?‍??‍?.

 

பல நடிகர்கள் உதவி செய்திருந்த நிலையில், நடிகர் விஜயும், அஜித்தும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை எனப் பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் பிரதமர் நிவாரண நிதிக்கு ஐம்பது லட்ச ரூபாயையும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஐம்பது லட்ச ரூபாயையும் நிதியுதவியாக அளித்திருக்கிறார். மேலும், ஃபெப்ஸி ஊழியர்களுக்கு இருபத்தி ஐந்து லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்ஸி ஊழியர்களுக்காக பத்து லட்சம் ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு இருபத்தி ஐந்து லட்சம் ரூபாயையும் வழங்கியிருந்தார்.

முன்னதாக நடிகர் சிவக்குமார் தன்னுடைய குடும்பத்தினர் சார்பாக பத்து லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக வழங்கியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் ஐம்பது லட்சம் ரூபாய் அளித்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் வழங்கினார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் 25kgs எடையுள்ள அரிசி மூட்டைகள் 150 கொடுத்து உதவினார். தயாரிப்பாளர் லலித்குமார் பத்துலட்சம் ரூபாயும், நடிகர் ஹரீஷ் கல்யாண் ஒருலட்ச ரூபாயும் வழங்கியிருந்தார்கள்.

வீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ ?‍??‍?.

 

ஃபெப்ஸி நடிகர்களுக்கு உதவி செய்வதைப் போன்று நடிகர் சங்கத்திலுள்ள நடிகர், நடிகைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என நடிகை குட்டி பத்மினி வீடியோ ஒன்றை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.அதில், ‘ நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் உங்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கம் மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. குறைந்தது 25 லட்ச ரூபாய் இருந்தால் தான் உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாயாவது கொடுக்க முடியும். நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.. தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்யுங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்’. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள்.

Back to top button