தகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1 நாற்காலி வந்தது சும்மாவா!
தளபதி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதை ஆளும் அதிபதியாக இருந்து வருகிறார். ஆனால், ஒவ்வொரு ரசிகனையும் காலரை தூக்கிவிட்டு நான் தளபதி ரசிகண்டா என்று சொல்ல வைக்க அவர் அடைந்த அவமானம், கஷ்டம், துரோகம் கொஞ்ச நெஞ்சம் இல்லை.
இன்று இந்திய சினிமாவே பேசப்படும் பொருள் Nepotism. ஆனால், ஒரு போதும் இந்த கலாச்சாரம் தமிழகத்தில் வென்றதே இல்லை, ஒரு கண்டேக்டர் தான் இன்று சூப்பர்ஸ்டாராக திகழ்கிறார்.
அதுபோல் விஜய் ஒரு பிரபல இயக்குனரின் மகன் என்ற போர்வையில் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தாலும், முதல் விமர்சனமே ‘காசு இருந்தா யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாமா, இதெல்லாம் ஒரு மூஞ்சியா?’ என்று ஒரு தங்கத்தை தகரமாக ஒதுக்கியது பல முன்னணி பத்திரிக்கைகள்.
ஆனால், அவர்கள் உரசியது தகரத்தை இல்லை, தங்கத்தை என்பது காலப்போக்கில் தெரிந்து, ஒதுக்கிய அனைத்து பத்திரிகைக்களும் இவரின் முகத்தை அட்டைப்படத்தில் போட அடித்துக்கொண்டனர்.
இந்த இடைப்பட்ட காலம் தான் விஜய் நம்பர் 1 என்ற யுத்தத்திற்கு போரடிய காலங்கள். எவ்ளோ ஹிட்ஸ் கொடுத்தும் இவர் என்னப்பா ஒரே மாதிரி நடிக்கிறார் என்று ஒரு கூட்டம் இவரை ஒதுக்க ஆரம்பித்தது.
இதை தொடர்ந்து மற்ற நடிகன் ரசிகர் என்பதை தாண்டி விஜய் எதிர்ப்பாளர் என்ற முகமே இவரை தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்க ஒவ்வொரு நாளும் விடியலை எதிர்நோக்கி காத்திருந்தது.
விஜய் எந்த ஒரு நொடியிலும் துவண்டு போகவில்லை, தன் ரசிகர்கள் என்ற அச்சாணியை நம்பி எதையும் கண்டுக்கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருந்தார்.
உச்சத்தை நோக்கி பயணிக்கும் தருணத்தில் சமூக வலைத்தளம் என்ற அரக்கன் விஜய்யை சூழ்ந்துக்கொண்டான்.
ஆம், முன்பு, பேப்பர், டீக்கடை என்று விஜய்யை பற்றி அவதூறு பேசியவர்கள் விஞ்ஞான வளர்ச்சியால் சமூக வலைத்தளத்தை தேர்ந்தெடுத்து விஜய் என்ற நடிகரையே ஒழிக்க தினமும் அவரை இகழ்ந்து வந்தனர்.
விஜய் அந்த போர்-க்கும் தயாரானார், எந்த சமூக வலைத்தளம் தன்னை இகழ்ந்ததோ, அதே தளம் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைந்து மெர்சல் காட்டி, தனக்கென்று ஒரு அன்பு சர்கார் அமைத்து, தலைவா என்று ரசிகர்களை பிகில் அடிக்க வைத்தது.
இப்படி தனக்கான அம்புகள் அனைத்தையும் மாலைகளாக அணிந்து இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக அமர்ந்தது சும்மாவா…!
நன்றி : Cineulagam