விளையாட்டு

தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்ரசிங் தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளதாகவும், அத்தகைய தீர்மானங்கள் தற்போது பகிரங்கடுத்தப்பட மாட்டாது எனவும் இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது! 1

நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் தோனி கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் அதன் பின்னரும் இடம்பெற்ற ஏனைய தொடர்களில் அவர் இந்திய அணிக்காக இணைத்துக் கொள்ளப்படவில்லை.

அதேவேளை அவரது எதிர்காலம் குறித்து இந்திய  அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 2020 ஐபிஎல் தொடருக்கு பின் தான் தோனி அணியில் ஆடுவாரா? என்பது தெரியும் எனக் கூறியுள்ளார்.

அதேவேளை ஒரு நிகழ்சியில் தனது எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, ஜனவரி வரை அது குறித்து எதுவும் கேட்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இந் நிலையிலேயே கங்குலி தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் இருப்பதாகவும், அதனை தற்போது பகிரங்கப்படுத்தப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button