நானும் ரெடி விஜய்யும் ரெடி, தளபதி 65..? வெளிப்படையாக போட்டுடைத்த ஷங்கர்
தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் தளபதி விஜய்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம்.
இப்படமே இன்னும் முடிவடையாத நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட்டை கேட்க துவங்கி விட்டார்கள் ரசிகர்கள். மேலும் விஜய்யின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசும் போழுது “நானும் ரெடி விஜய்யும் ரெடி, எப்போ வேண்டுமானாலும் நடக்கும்” என்று வெளிப்படையாக போட்டுடைத்தார்.
இதனால் தற்போது தளபதி 65 படத்தை ஷங்கர் தான் இயக்கு போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.