பெரமுனவுடன் சு.க இணைந்து செயற்பட தவறினால் எதிர்காலம் இல்லாமல் போகும் : வாசுதேவ
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் சிலரே தடையை ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செல்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவறினால் எதிர்காலம் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுன கட்சியும் பிரிந்து செயற்பட்டாலும் ஒரே கொள்கையை உடையதாகும். அதனால் இரண்டுகட்சிகளும் இணைந்து செயற்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த கலந்துரையாடல்கள் வெற்றியளித்திருப்பதாகவே தெரியவருகின்றது.