மதுபோதையில் வாகனம் செலுத்தியோரிடமிருந்து 50 நாட்களில் 25 கோடி ருபாய் வரை அபராதம்
மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந்து சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர இன்று சனிக்கிழமை வரையான 50நாட்களில் 10214 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதியிலிருந்து மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த 50 நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 10214 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதேசத்திலேயே அதிகளவான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிதொடக்கம் இன்று சனிக்கிழமை காலை 6மணி வரையான 24 மணித்தியாலங்களில் 160 பேர் வரையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.