சினிமா
மரண கலாய் செய்த யோகி பாபு! இத்தனை லட்சம் பார்வைகளா – கோமாளி சில நிமிட காட்சி வீடியோ
தற்போது காமெடி நடிகர் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அவருக்கு மசுவு கூடிவிட்டது. அவர் ஹீரோவாகவும் தர்மபிரபு, கூர்க்கா படங்களில் நடித்திருந்தார்.
அண்மையில் அவர் ஜெயம் ரவியுடன் நடித்திருந்த கோமாளி படம் வெளியாக நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. வசூலும் நல்ல முறையில் இருந்து வருகிறது.
இப்படத்தில் 90 களில் பல நினைவுகளை கூறும் வகையிலான காட்சிகள் அமைந்துள்ளது. இதில் மேலும் கூகுள் மேப் ஐ கலாய்க்கும் விதமாக அமைக்கப்பட்ட காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
இதை ஒரு நாளைக்குள் 7.21 லட்சம் பேர் பார்த்துள்ளனர். கூகுள் மேப் ஐ நம்பி நாமும் வழி தெரியாமல் சில இடங்களில் சிக்கியுள்ள நிகழ்வுகளை மறந்து விட முடியுமா என்ன?