செய்திகள்
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்
உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம்:
- மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவு – வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டம்:
- ஹட்டன் பொலிஸ் பிரிவு – போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம்:
- கடவத்தை பொலிஸ் பிரிவு – எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை முதலான கிராம சேவகர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்:
- இரத்தினபுரி பொலிஸ் பிரிவு – கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவு
- இறக்குவானை பொலிஸ் பிரிவு – பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவு
- கலவான பொலிஸ் பிரிவு -ஹப்புகொட கிராம சேவகர் பிரிவு
களுத்துறை மாவட்டம்:
- தொடாங்கொட பொலிஸ் பிரிவு – போம்புவல கிராம சேவகர் பிரிவு