ஆன்மிகம்

12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பலன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..?

ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவான் முதன்மையான கிரகம் என எடுத்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான் மே மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமையன்று காலை 11.18 மணிக்கு “மேஷம்” ராசியிலிருந்து “ரிஷபம்” ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு 2 ஆம் இடமாகிய ரிஷப ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடங்களில் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களோடு பிரச்சனைகள் தோன்றலாம். எதிர்பார்த்த உதவிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். தந்தைக்கு உடல்நலம் பாதித்து மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும். தொழில், வியாபாரங்களில் பெரிய லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாது.
ரிஷபம்:
ரிஷப ராசியிலேயே சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதில் சிறிது தாமதங்கள் உண்டாகும். பெண்களால் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். பணம் சம்பந்தமான விவகாரங்களில் இழுபறி நிலை இருந்தாலும் பொருள் வரவில் எந்த குறையும் ஏற்படாது. பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயங்கள் உண்டாகும்.

மிதுனம்:
மிதுன ராசிக்கு 12 ஆம் வீடான ரிஷப ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்படும். தந்தையுடன் சிலருக்கு மனஸ்தாபம் உண்டாகலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரங்களில் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். எனினும் அவர்களை வெற்றிகொள்ளும் அமைப்பு உண்டாகும். அதிகம் அலைச்சல்களால் சிலருக்கு மனச்சோர்வு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள கூடும்.
கடகம்:
கடக ராசிக்கு சூரியன் 11 ஆம் வீடான ரிஷப ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் ஏற்கனவே இருந்த நோய் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். தாராள பணவரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகிஸ்தர்களுக்கு அவர்கள் விரும்பிய ஊதிய உயர்வுகள், பணியிட மாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபங்கள் உண்டாகும். தாய் வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த ராசியின் அதிபதியாகிய சூரியன் 10 ஆம் வீடான ரிஷப ராசியில் உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் அலைச்சல்கள் சிலருக்கு ஏற்படக்கூடும். தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களை வெற்றி கொண்டு லாபங்களை பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்கு சூரியன் 9 ஆம் இடத்தில் அமர்வதால் தந்தை வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் நிமித்தமாக தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பொருள் வரவு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகளை மேற்கொண்டால் சிறப்பான பலன்களை பெறலாம். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு 8 ஆம் வீடான ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும். குடும்ப தேவைகளுக்காக கடன் வாங்க கூடிய சூழல் உருவாகும். வீண் விரயங்கள் ஏற்படும். பெண்கள் வழியில் சில பிரச்சனைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் மட்டுமே கிடைக்கும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு 7 ஆம் இடமான ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் இழுபறி நிலை ஏற்படும். வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாகலாம். பிறருடன் பேசும் போது வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமற்ற நிலை உண்டாகலாம். வாகனங்களை இயக்கும் போது எச்சரிக்கை அவசியம்.
தனுசு:
தனுசு ராசிக்கு 6 ஆம் வீடான ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப தேவைகளுக்காக கடன் வாங்க நேரிடும். எதிரிகளால் உங்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படக்கூடும். அரசாங்க வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். பணவரவிற்கு குறை ஏதும் ஏற்படாது. பெண்கள் வழியில் சிறிது வீண் விரயங்கள் ஏற்படும். சிலர் தெய்வீக பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டாகும்.
மகரம்:
மகர ராசிக்கு 5 ஆம் வீடான ரிஷப ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் சிலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரங்களில் சிறந்த லாபங்கள் ஏற்படும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள். சிலர் புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வார்கள். அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்க கூடும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு சூரியன் 4 ஆம் இடமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மனச்சோர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, பணியிடமாற்றம் போன்றவை தாமாதமாகும். உறவினர்களுடன் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகள் விடயங்களில் இழுபறி நிலை நீடிக்கும். சராசரியான வருமானம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த வெற்றிகளை பெறலாம்.
மீனம்:
மீன ராசிக்கு 3 ஆம் வீடான ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடலில் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். சகோதர வழி உறவுகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும். சிலர் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்கும் முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. திருமண வயதுள்ள பெண்களுக்கு பொருத்தமான வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பலன்கள்.. சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..? 1

Back to top button