செய்திகள்

சூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

சூரிய பகவான் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.56 மணிக்கு “கும்ப” ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும். சிலர் கோயில் சம்பந்தமான காரியங்கள், ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை, தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார நிலை சமமான அளவில் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் புதிதாகத் தொடங்கிய தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.
உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலை ஏற்பட்டு வந்து சேரும். வெளிநபர்களுடன் ஒரு இடைவெளி விட்டு பழகி வந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 10 ஆம் வீடான மீன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் இந்த ராசிக்காரர்களின் சிந்தனை மற்றும் செயல் திறன் அதிகரிக்கும். கல்வி, கலைகளில் மாணவர்கள் சிறப்பார்கள்.
விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
கடகம்
கடக ராசிக்கு சூரியன் 9 ஆம் வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகியிருப்பதால் நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடைபெறும் சூழல் ஏற்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களோடு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வைப்பது அவசியம். சிலருக்கு கடன் வாங்கும் சூழலும் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த ராசியின் அதிபதியாகிய சூரியன் 8 ஆம் வீடான மீன ராசியில் இருப்பதால் உடல்நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
பணியிடங்களில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். தந்தைக்கு உடல்நலம் பாதித்து மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும். தொழில், வியாபாரங்களில் பெரிய லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாது.
கன்னி
கன்னி ராசிக்கு சூரியன் 7 ஆம் இடத்தில் அமர்வதால் வருமானம் சீரான அளவில் இருக்கும். உடலில் சிறிது ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
புதிய முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகளை செய்தால் மட்டுமே சிறப்பான வெற்றிகளை பெற முடியும். ஒரு சிலர் கோயில், புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு 6 ஆம் வீடான மீன ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் தொழில், வியாபாரங்களில் கடுமையான போட்டி இருக்கும் என்றாலும் அவற்றை சமாளித்து லாபங்களை பெறுவீர்கள்.
உறவினர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் தாமதமாகும். கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் ஏதும் ஏற்படாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 5 ஆம் இடமான மீன ராசியில் சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் கடுமையான உழைப்பை தந்து வெற்றி பெறுவீர்கள்.அரசியலில் இருப்போர்களுக்கு பதவிகள் கிடைக்கும்.
உடல்நலம் நன்றாக இருக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளை சற்று தள்ளி போடுவது நல்லது. தொழில், வியாபாரங்களில் சராசரியான வருமானம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு 4 ஆம் வீடான மீன ராசியில் சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் பெண்களுக்கு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும். எல்லா விஷயங்களிலும் சிறிது விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
உங்களின் நேரடி, மறைமுக எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் உண்டாகும். தொழில், வியாபாரங்கள் சராசரியான அளவில் இருக்கும். பண விவகாரங்களில் பிறருடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்கு 3 ஆம் வீடான மீன ராசிக்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் மக்கள் செல்வாக்கு உண்டாகும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். உடல்நலம் அடிக்கடி பாதிப்படைந்து சரியாகும். புதிய முயற்சிகளை சற்று தாமதித்து செயல்படுத்துவது நல்லது. வெளிநாடுகளில் இருந்து சிலருக்கு நல்ல செய்திகள் வரும். பூர்வீக சொத்து விடயங்களில் சிலருக்கு சாதகம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்கு சூரியன் 2 ஆம் இடமான மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களுக்கோ உங்களின் நெருங்கிய உறவுகளுக்கோ ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.
உங்களுக்கு வர வேண்டிய பழைய பாக்கிகளில் இழுபறி நிலை நீடிக்கும். உறவினர்களுடன் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடங்களில் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்
மீன ராசியிலேயே சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உங்களுக்கு வெளிநபர்களிடம் மதிப்பு கூடும். உடலில் சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீங்கள் நினைத்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
குடும்பத்தினர் அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணவரவுகளில் குறை ஏதும் ஏற்படாது. ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
சூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? 1

Back to top button