செய்திகள்

இன்றைய நாள் (16-10-2018)

“நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்…!”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் .!

16.10.2018 விளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 30ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி பகல்11. 58 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. பூராடம் நட்­சத்­திரம். முன்­னி­ரவு 8.35 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. அஷ்­டமி. சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்– மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30 வார­சூலம் – வடக்கு. (பரி­காரம் –பால்). பத்­ர­காளி அவ­தார தினம். பத்­தி­ரிகா பூஜா.

‘விஷ்ணு சகஸ்ர நாமம்’ ஸாம­கா­யந-– முக்தன் தன்­னை­ய­டைந்து ஸாம­கானம் செய்­யும்­படி செய்­பவன்.
பாப­நா­சன– பக்­தனின் பாவங்­களைப் போக்­கு­பவன். சங்­கு­சக்­கர ரதாங்க பாணி– சங்கு சக்­க­ரத்தைத் தரித்­தவன்.
ஸர்வ பிர­ணா­யுத பாணி– துன்­பங்­களைத் துடைக்கும் ஆயு­தங்­களைத் தரித்­தவன். விஷ்ணு சகஸ்ர நாமம் முற்­றிற்று. நாளை பதினெண் புரா­ணங்­களில் சிரேஷ்­ட­மான
விஷ்­ணு­பு­ராணம்.(“நல்­லொ­ழுக்கம் என்­பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்­ம­திப்­பாகும்” – அரிஸ்­டாட்டில்)
கேது, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1– 2– 5
பொருந்தா எண்கள்: 7– 8–
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்பச்சை.
இராமரத்தினம் ஜோதி

மேஷம்: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.


ரிஷபம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
மிதுனம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.




கடகம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டா கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.
சிம்மம்: மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என் றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்திலும் கவனமாக இருக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
கன்னி: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவி கிடைப்பதால் உற்சாகமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாகத் தேடிய பொருள் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.
துலாம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.
விருச்சிகம்: தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு: நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மகரம்: இறைவழிபாட்டுடன் நாளைத் தொடங்குவீர்கள். உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்பம்: இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.
மீனம்: அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.
இன்றைய நாள் (16-10-2018) 1

Back to top button