செய்திகள்

இன்றைய நாள் (17-12-2018)

“சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை..!” : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.

17.12.2018 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 02 ஆம்  நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கில பட்ச தசமி திதி பின்­னி­ரவு 4.51 வரை. பின்னர் ஏகா­தசி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. சித்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், உத்­திரம். சுப­நே­ரங்கள் பகல் 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.00–12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் –தயிர்). வாயிலார் நாயனார் குரு­பூசை. கிழக்கில் குரு உதயம்.
மேடம் : நன்மை, யோகம்
இடபம் : அமைதி, தெளிவு
மிதுனம் : செலவு, விரயம்
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : கவலை, கஷ்டம்
கன்னி : வரவு, இலாபம்
துலாம் : தடை, தாமதம்
விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்
தனுசு : அன்பு, ஆத­ரவு
மகரம் : பக்தி, ஆசி
கும்பம் : தெளிவு, அமைதி
மீனம் : அன்பு, பாசம்
அதி­காலை சகல விஷ்ணு ஆல­யங்­க­ளிலும் திருப்­பாவை ஓதுதல். நாளை செவ்வாய் அதி­காலை 5 மணிக்கு தெகி­வளை நெடுமால் ஸ்ரீவிஷ்ணு ஆல­யத்தில் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பூஜை. ஸ்ரீ வைகுண்ட ஏகா­த­சியை முன்­னிட்டு பர­ம­பதம் என்னும் சொர்க்க வாசல் திறக்­கப்­பட்டு சுவாமி பர­ம­ப­த­வாசல் வழி­யாக எழுந்­த­ருளி அடி­யார்க்கு திரு­வீ­தி­யுலா இடம்­பெற்று அடி­யார்கள் வைகுந்தம் புகுதல் வைபவம் வைகுந்தம் புகு­வது மன்­னவர் விதியே.
சனி, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
பொருந்தா எண்கள்: 8, 4
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)
இன்றைய நாள் (17-12-2018) 1

Back to top button