ஆன்மிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: சிம்ம ராசிக்காரங்களே உங்களுக்கு இது பொன்னான நேரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: சிம்ம ராசிக்காரங்களே உங்களுக்கு இது பொன்னான நேரம் 1

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்த மனக்குழப்பங்கள் நீங்கப்போகிறது. ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறப்பபோகிறது.
குருபகவான் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார். ராசியை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும் ஐந்தாம் வீட்டில் ஆட்சியாக அமர்வதால் பொற்காலம் வந்து விட்டது. மூன்று மற்றும் நான்காம் வீட்டில் இருந்த குருவினால் பலவித குழப்பங்கள் இருந்தது. இனி இந்த குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியை தரப்போகிறார். ஐந்தாம் வீட்டில் குரு அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் குழப்பங்கள் தீரும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்க்கு வருகிறார். இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். இந்த குரு பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறது.
புண்ணியங்களால் நன்மை
பொன்னவன் குருவின் பார்வை உங்கள் ராசி மீது முழுவதுமாக விழுவதால் நீங்க நினைத்தது நடக்கும் தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது.
ஐந்துக்கு அதிபன் ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். உங்களின் ஆழ் மனதில் உள்ள ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். புதிய தொழில், ஆசையை நிறைவேற்றுவார் குரு. நம்பிக்கை அதிகரிக்கும் முன் ஜென்ம புண்ணியங்கள் நிறைவேறும். நல்லவைகள் யாவும் வெளியே வரும்.
ராஜாங்க பதவி தேடி வரும்
குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடைபெறும் சனியோடு குரு இணையும் காலம் ராஜயோகம். பயணங்களில் வெற்றி, நல்ல வருமானம், நல்ல வேலை கிடைக்கும். உங்கள் ராசியை குரு பார்ப்பது ராஜயோகத்தை தரும். ராஜங்க பதவி தேடி வரும். பெயர் புகழ் கீர்த்தி தரும் குரு லாப ஸ்தானமான மிதுனத்தை பார்க்கும் போது தொழிலில் வெற்றி லாபத்தை தருவார். ஆளுமை தன்மையுள்ள விசேசத்தை தருவார். ஆற்றல் வாய்ந்த நேரம்.
திருமண வாய்ப்பு
அதிர்ஷ்டம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து வருமானம் கிடைக்கும். அப்பாவினால் லாபம் கிடைக்கும் காரணம் ஒன்பதாம் வீட்டினை குரு பார்க்கிறார். அப்பாவினால் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு இரண்டாம் திருமண வாய்ப்பும் அமையும். எந்த வேலையில் இருந்தாலும் உங்களின் திறமை பளிச்சிடும்.
புதிய வேலை கிடைக்கும்
உங்கள் ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம்.
பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும்.பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழுது தான் கிடைக்க போகிறது.
குழந்தைகளால் மகிழ்ச்சி
நீங்க சொல்வதை எல்லாம் கேட்க தயாராகி விட்டனர். படிப்பு, வேலைகளில் பிள்ளைகளின் திறமைகள் பளிச்சிடும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்கள் ராசியை பார்ப்பதால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். வம்பு வழக்குகள் நீங்கும். வீரு கொண்டு எழுவீர்கள். சோம்பல் விலகும். பிசினசில் வளர்ச்சியும் வேகமும் அதிகரிக்கும் முன்னேற்றத்தையும் தரும். சொல்வாக்கும், செல்வாக்கும் பெருகும். எடுக்கிற காரியங்களில் வெற்றி கிடைக்கும் தொட்டவை துலங்கும். சகோதர உறவுகளினால் அன்பும் ஆதரவு கிடைக்கும்.
திருமணம், புத்திரபாக்கியம்
குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது. பாஸ்போர்ட் விசா பிரச்சினைகள் தீரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள்.
நரசிம்மர் வழிபாடு நன்மை
11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்குகளில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். கேது உடன் குரு இணையும் கால கட்டத்தில் பிள்ளைகளை கோவிலுக்கு அழைத்துப்போங்கள். விநாயகர், நரசிம்மர் வழிபாடு நன்மையை தரும்.

Back to top button