ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருங்க… அசந்து போயிடுவீங்க!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29யும், திருக்கணிதப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேஷம் ராசிக்காரர்கள் இதுநாள்வரை பல சங்கடங்களை அனுபவித்து வருகிறீர்கள். தனுசு ராசிக்கு செல்லும் குருபகவானால் அடையப்போகும் பலன்களைப் பார்க்கலாம்.
குரு பொன்னவன். சுபமானவர் குரு தனுசு ராசியை எட்டும் காலம் நன்மைகள் நடைபெறும். குருபகவான் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். காலபுருஷ தத்துவப்படி தனுசு ஒன்பதாம் வீடு. குருவிற்கு ஆட்சி வீடு. தனது வீட்டில் அமர்ந்து ஆட்சி செய்யப்போகும் ஹம்ச யோகத்தை தரப்போகிறார். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு’ என்பார்கள் மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு அமரப்போகிறார்கள்.
தனுசு மீனம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் குரு கடகத்தில் உச்சமடைகிறார் மகர ராசியில் நீசமடைகிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்றால் குரு பார்வை வேண்டும். தெய்வ அருள் கிடைக்கும். குரு தனது 5,7,9ஆம் பார்வையாக மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்க்கிறார். இந்த மூன்று ராசிகளும் சுபத்துவம் அடைகின்றன.
பண வருமானம் அதிகரிக்கும்
மேஷத்தில் ஒன்பதாம் வீட்டில் அமரும் குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்கிறார் அங்கே சனி, கேது குரு இணைகிறார். குரு பாக்ய ஸ்தானம் அயன ஸ்தய ஸ்தானதிபதி இதுநாள் வரை 8ல் இருந்த குரு பண இழப்பு, உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் திருட்டு பயம், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. குரு எட்டில் இருந்தபோது அனுபவித்த பிரச்சினை துன்பங்களில் இருந்து விடுதலை. வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஏற்படும். ஓராண்டு காலம் சுபங்கள் நிறைந்த காலம். நல்லவை அதிகமாக நடக்கும். இந்த முறை அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். பண வருமானம் கூடும். புதிய திருப்பம் ஏற்படும்.
மேஷ ராசியின் மீது பார்வை
குருவின் ஐந்தாம் பார்வையாக மேஷத்தை பார்ப்பதால் செல்வாக்கு உயரும் தடைகள் விலகும். இது அற்புதமான குரு பெயர்ச்சி. பண ரீதியாக ஏற்பட்டு வந்த தடைகள் விலகும். ரொம்ப புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குரு தன்னுடைய வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் வலிமை அதிகரிக்கும். பொன் போல வாழ்க்கை ஒளிரும். பணம் வருமானம் அதிகரிக்கும். கடன் நிவர்த்தியடையும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுப மங்கள குரு.
நன்மைகள் நடைபெறும் காலம்
குரு ஏழாம் பார்வையாக உங்களின் மூன்றாம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தை பார்க்கிறார். இளைய சகோதரர் சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சினைகள் தீரும். உங்களிடம் பிரச்சினை செய்தவர்கள் விலகுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நன்மையை தரக்கூடிய குருப்பெயர்ச்சி. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் தீரும்.
புத்திரபாக்கியம்
குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டில் குரு பார்வை விழுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்கள் நடைபெறும். பூர்வ ஜென்மம் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதின் ஆசைகள் நிறைவேறும் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆளுமை புகழ் கீர்த்தி கிடைக்கும். கல்வி ஸ்தாபனம் நடத்துபவர்களுக்கு நன்மை நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பாவங்கள் தீரும்
வம்பு வழக்கு தகராறு, நிலத்தகராறு, பங்காளி தகராறுகள் தீரும். யோகமான கால கட்டம் இதுவாகும். சிம்மராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். உங்க பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் உங்களின் முந்தைய காலகட்டத்தில் நீங்கள் செய்த பாவங்கள் தீரும். தாத்தா வழி சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். என்ன தொழில் செய்தாலும் அது வளர்ச்சியை அடையும். பிசினஸ் வீறு கொண்டு எழும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உயர்கல்வி யோகம்
உயர்கல்வி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு உயர்வான நேரம் இதுவாகும். மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த சிரமங்கள் நீங்கும். தொல்லைகள் ஒழியும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு யுனிவர்சிட்டியில் இடம் கிடைக்கும். வரவேண்டிய நிலுவை பணம் வந்து சேரும். மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
திருமணம், குழந்தை பாக்கியம்
பாக்ய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் அமர்ந்திருப்பதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் குடும்பத்தோடு சென்று குல தெய்வத்தை கும்பிடுங்கள். திருமண தடை இருந்த பெண்களுக்கு திருமணம் முடியும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரச்சினைகள், தடைகள் நீங்கும். குருபகவான் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது. ஆன்மீக விசயங்களில் அதிகம் ஈடுபடுங்கள் நன்மைகள் நடைபெறும் இந்த காலத்தில் பொள்ளாச்சி பக்கத்தில் உள்ள ஈச்சனாரி விநாயகரை கும்பிடுங்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருங்க... அசந்து போயிடுவீங்க! 1

Back to top button