ஆன்மிகம்

சுக்கிரனின் சஞ்சரிப்பு.., அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்

சுக்கிரன் செழிப்பு, செல்வம், அன்பு மற்றும் பொருள் மகிழ்ச்சியைத் தருகிறார். சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் இருக்கும் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் வருகின்ற ஏப்ரல் 25ஆம் திகதி, அஸ்வினி நட்சத்திரத்திற்கு குடிபெயரவுள்ளார். இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் மே 05ஆம் தேதி வரை, சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். அந்தவகையில், சுக்கிரனின் நட்சத்திரப்பெயர்ச்சியால் லாபம் பெறும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்
தலைமைப் பண்புகள் கூடும்.
பணியிடத்தில் புரோமோஷன் கிடைக்கும்.
தொழில் முனையும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
எக்கச்சக்கமான நற்பலன்களைப் பெறுவீர்கள்.
உடல்நலம் சரியாகும்.
காலில் இருந்த பிரச்னைகள், கண்ணில் இருந்த பிரச்னைகள் சரியாகும்.
இடையில் சண்டையினால் பேசாமல் இருந்த காதலர்கள், இந்த காலத்தில் மீண்டும் ஒன்றுசேர்ந்துவிடுவர்.
கல்யாண வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே இருந்த பிரச்னைகள் சரியாகும்.
உங்களுடைய ஒவ்வொரு துளி வியர்வைக்கும் உண்டான பணம் வந்துசேரும்.
இந்த காலத்தில் பணத்தை நல்ல முறையில் சேமிக்கக் கற்றுக்கொள்வீர்கள்.

கன்னி
சிறப்புமிக்க பலன்களைப் பெறப்போகிறீர்கள்.
இத்தனை நாட்களாக பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் இருந்த நபர்கள் வாங்கிய பணத்தைக் கொடுப்பர்.
குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
ஒற்றுமை அதிகரிக்கும்.
வணிகம் செய்யும் நபர்களுக்கு ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.
சில யுக்திகளும் வசப்படும்.
பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குவியும்.
இத்தனை நாட்களாக சம்பாதித்த பணத்தை ஏதாவது ஒருவகையில் இழந்தீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் அதனை மீண்டும் சம்பாதிப்பீர்கள்.

மிதுனம்
இக்கால கட்டத்தில் மூளை சுறுசுறுப்பாகும்.
தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு மாற்றுசிந்தனை பெருகும். அது லாபமாக மாறும்.
பணியிடத்தில் உங்களின் திறமையைப் பார்த்து சம்பளத்தில் உயர்வு வரலாம்.
உங்களது மேலதிகாரியின் குட்புக்கில் நீங்கள் இடம்பெயர்வீர்கள்.
காதல் செய்துகொண்டு இருக்கும் மீன ராசியினர், இருவீட்டாரின் சம்மதத்தைப் பெற இக்காலம் ஏற்றது.
உறவில் பிரிந்துபோனவர்கள் உங்களது நல்ல குணத்தைப் பார்த்து ஒன்றுசேர்வார்கள்.
இந்த காலத்தில் மி பொருளாதார ரீதியாக முன்னேறுவார்கள்.

Back to top button