செய்திகள்

317 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்..

தைவானின், கவுசிங் நகரிலிருந்து 317 பயணிகளுடன் ஹொங்கோங் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹொங்கோங் நாட்டின் கதைய் டிரகன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான மேற்படி விமானத்தின் என்ஜினில் திடீரென புகை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே உடனடியாக விமானம் அவசரமாக, புறப்பட்ட இடத்திற்கு திரும்பிச்சென்றது.
இதன்போது விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
என்ஜினில் இருந்து புகை வெளிவந்ததற்கான காரணம் குறித்து விமான பொறியாளர்கள் ஆய்வுமேற்கொண்டுள்ள நிலையில், விமானத்தில் பறவை மோதியமையினாலேயே புகை வெளியேறியிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலில் தெரிவித்துள்ளனர்.
317 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்.. 1

Back to top button