செய்திகள்

அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம் தீப்பற்றியதில் 41 பேர் பலி

ரஸ்யாவில் விமானம் ஒன்று அவசரமாக தரை இறக்கப்பட்ட வேளை தீப்பற்றியதில்  41 பேர் உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான பணியாட்கள் என மொத்தம் 78 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டப் போது உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முயற்சித்த வேளை போது எதிர்பாரத விதமாக தீ பிடித்து எரிந்துள்ளது.  விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும் இந்த விபத்தில் 41 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 11 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
விபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இவ்விபத்தையடுத்து, மொஸ்கோவுக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 
அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம் தீப்பற்றியதில் 41 பேர் பலி 1

Back to top button