செய்திகள்

சூடுபிடிக்கும் பிரெக்ஸிற் விவகாரம்! 4.7 மில்லியனை தாண்டிய பிரித்தானிய மக்களின் கையொப்பங்கள்?

பிரெக்ஸிற் விவகாரத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் பிரெக்ஸிற்றைத் திரும்ப பெறுமாறு கோரி மக்கள் கையெழுத்து சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கையெழுத்து சேகரிப்பானது நேற்று (சனிக்கிழமை) மாலை வரையில் 4.7 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
‘ஒரு மனு தொடர்பாக 10 000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டால் அதற்கு நாடாளுமன்றம் பதில் அளிக்க வேண்டும்.
அதேபோல ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்படுமாயின் அது தொடர்பில் நாடாளுமன்றில் திறந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என பிரித்தானிய சட்டம் தெரிவிக்கிறது . இந்நிலையில் பிரெக்ஸிற் தொடர்பான கையெழுத்துக்கள் 4 .7 மில்லியனை தொட்டுள்ளது.
கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை கடந்த புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் பிரெக்ஸிற் விவகாரம்! 4.7 மில்லியனை தாண்டிய பிரித்தானிய மக்களின் கையொப்பங்கள்? 1

Back to top button