செய்திகள்
ஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி
ஐ.பி.எல் தொடர்களில் 5,000 ரன்கள் குவித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார் சுரேஷ் ரெய்னா.
12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி, சிஎஸ்கேவின் சிறப்பான பந்துவீச்சினால் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங்கில் 17.4வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்து வென்றது.
ரெய்னாவின் சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 19(21) ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் 5000 ரன்கள் குவித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார் ரெய்னா.
GETTY IMAGES
முன்னதாக அவர், 4985 ரன்களை குவித்திருந்தார். 15 ரன்கள் எடுத்தால் 5000 ரன்களை எட்டலாம் என்ற சூழலில் இந்த போட்டியில் 19 ரன்கள் எடுத்து ரெய்னா சாதனையை படைத்துள்ளார்.
தவறவிட்ட கோலி
விராட் கோலி 4948 ரன்கள் எடுத்திருந்தார். 52 ரன்கள் எடுத்தால் 5000 ரன்களை எட்டலாம் என்ற நிலை அவருக்கும் இருந்தது. ஆனால் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.