செய்திகள்

விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் பலி!

அமெரிக்காவில் சிறிய ரக விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதில் விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் பலி! 1
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கியது. 
இந்த கோரவிபத்தில் விமானி ஜெப்ரே வெயிஸ் உட்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

Back to top button