செய்திகள்

சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை [டாக்கா]

பங்காளதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த சண்டையில், இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை [டாக்கா] 1
டாக்காவிற்கு அருகே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு உளவு பிரிவின் தகவலுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டனர். 
அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்து, உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, அவ்வீட்டை சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில், பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். 
இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர். பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவியை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
 இதுகுறித்து, சிறப்பு படைப்பிரிவு அதிகாரி தெரிவித்ததாவது, 
அவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். 
இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம், என்றார். 
ஜூலை, 2016-ல் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் ஐ.எஸ்., பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

Back to top button