ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் ….சீறிப்பாயும் சிம்ம ராசிக்காரர்களே இனி ராஜயோகம் தான்!

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சிம்மம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு சனி பகவான் நகர்கிறார். ஆறாம் இடத்தில் சனி பகவான் அமர்வது அற்புதமான இடம். சிம்மம் ராசிக்காரர்களுக்கு வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் எப்படி என்று பார்க்கலாம்.
சனியானவர் உங்களது ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. 30 மாதங்கள் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாக இனி சஞ்சரிக்கவிருக்கும் 6ஆம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். நோய்களை அடையாளம் கண்டு தீர்ப்பீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
நல்ல காலம் பிறக்கப்போகுது
இதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். காரணம் அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைத்தது. ஐந்தாம் இட சனி அச்சத்தை அதிகரித்தது. இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும்.
மன மகிழ்ச்சி அதிகரிக்கும்
இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை.
சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும், நகை தொழில் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா துறைகளில் வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகம் இருக்கும்.
வருமானம் அதிகரிக்கும்
இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும்.
ஆரோக்கியத்தில் அக்கறை
உடன்பிறந்த சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்
தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.
குழந்தை பாக்கியம் கைகூடி வரும்
காதல் கணிந்து திருமணத்தில் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும்.
உணவு விசயத்தில் கவனம்
உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். சரிவிகித சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
உயர்படிப்பில் உற்சாகம்
மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கு செல்வீர்கள். விளையாட்டு, கலைத்துறை என ஆர்வத்தோடு செயல்பட்டு பரிசுகளை வெல்வீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சாமர்த்தியமும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.
சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்
பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். விருந்து, சுற்றுலா என உற்சாகமாக இருப்பீப்கள். பெண்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். வீட்டையும், அலுவலகத்தையும் கவனிப்பதைப் போல உங்கள் உடம்பையும் கவனியுங்கள். நோய்களை சனிபகவான் காட்டிக்கொடுப்பார். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் எனவே லேசான உடல்நலப்பிரச்சினை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்று உடலை கவனியுங்கள்.
பணத்தை சேமித்து பழகுங்கள்
சனிபகவான் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு யோகம் கைகூடி வரும். 3வது பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத பணம் வந்தாலும் அதனை கவனத்தோடு செலவு செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகளும், அவமானங்களும் ஏற்படும். கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். பாதிப்புகள் குறைய குச்சனூர் சென்று சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் ....சீறிப்பாயும் சிம்ம ராசிக்காரர்களே இனி ராஜயோகம் தான்! 1

Back to top button