செய்திகள்

மற்றுமோர் பயங்கர விமான விபத்து! ஓடு தளத்தில் நடந்த பெரும் சோகம்!!

நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் நேற்று ஒரு சிறிய விமானம் புறப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகொப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகொப்டர்கள் மீது மோதி நொருங்கியது.
இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகொப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- ஆய்வாளா் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் உயிாிழந்தனா்.
படுகாயமடைந்த மற்றொரு உதவி ஆய்வாளர் ருத்ரா பக்தூர் ஸ்ரேஸ்தா காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர்கள் தவிர ஹெலிகொப்டரில் அமர்ந்து இருந்த விமானி கப்டன் ஆர்.பி. ரொசாயா, கப்டன் சேட் குரங் ஆகியோர் காயமடைந்தனர்.
மற்றுமோர் பயங்கர விமான விபத்து! ஓடு தளத்தில் நடந்த பெரும் சோகம்!! 1

Back to top button