செய்திகள்

கடன் பிரச்சினையா? இதோ எளிய பரிகார முறைகள்

இப்போழுது இருக்கும் காலக்கட்டத்தில் எல்லோருக்குமே கடன் பிரச்சினை பெரிதும் உள்ளது.
ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் இன்றும் எங்கையாவது கடன் வாங்கி கொண்டு தான் உள்ளோம். அப்படி வாங்கும் கடனை திருப்பி கொடுக்க முடியாம கஸ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றோம்.
அதுமட்டுமின்றி ஆன்மீகப்படி உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் எப்போது வருகிறாரோ அப்போது யாரிடம் உதவி கேட்டாலும் கிடைக்கும்.1,.3,6,7,8,12 ல் சந்திரன் இருக்கும் போது கடன் கேட்டால் கிடைக்காது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் கடன் வாங்க வேண்டும். தற்போது வாங்கிய கடனை நாம் விரைவில் அடைக்க ஆன்மீகத்தில் சில வழிமுறைகள் கூறப்படுகின்றது. தற்போது அதனை பார்ப்போம்.
  • செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்.
  • சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்.
  • ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..
  • திண்டிவனம் அருகில் இருக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று காலை 5 மணிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட கடுமையான நெருக்கடிகள் தீரும்.
  • குலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள். ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெளர்ணமி அன்றும் செல்லலாம்.
  • 16 விதமான அபிஷேகம் செய்து சர்க்கரை பொங்கல் வைத்து கோயிலுக்கு வருவோருக்கு பிரசாதமாக கொடுக்கவும். 27 நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
  • ஜாதகத்தில் என்ன திசைபுத்தி நடக்கிறதோ அதற்கேற்றப்படி தானம், தர்மம் செய்து கர்ம வழி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.
Related image

Back to top button