ஆன்மிகம்

சனி வக்கிரம் – யாருக்கெல்லாம் நன்மை?, யாருக்கெல்லாம் தீமை?: பரி­காரங்கள் இதோ..!

சனி­ப­கவான் தற்­போது தனுசு ராசியில் அமர்ந்­தி­ருக்­கிறார் என்­றாலும் இப்­போது வக்கி­ர­நி­லையில் சஞ்­ச­ரிக்­கிறார். சனி வக்­கி­ர­ம­டை­வதால் சனிப்­பெ­யர்ச்­சியால் யாருக்­கெல்லாம் பாதிப்­பாக இருந்­ததோ அவர்­க­ளுக்கு சில நன்­மை­க­ளையும் யாருக்­கெல்லாம் சாத­க­மாக இருந்­ததோ அவர்­க­ளுக்கு சில பாதிப்புகளும் உண்­டாக வாய்ப்­புகள் அதிகம். 
ஒரு ராசியில் அதிக காலம் தங்­கி­யி­ருந்து பலன்கள் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கிரகம் சனி. இரண்­டரை ஆண்­டு­காலம் ஒரு ராசியில் தங்கும் சனி ஆண்­டுக்கு ஒரு­முறை வக்கி­ர­ம­டை­கிறார். சனிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்­ச­ரிக்கும் போது வக்கிரம் பெற்று ஒன்­பதாம் வீட்­டிற்கு சூரியன் வரும் போது வக்கிர நிவர்த்­தி­ய­டைவார். 

சுமார் 140 நாட்கள் வக்கிர­க­தியில் சஞ்­ச­ரிக்கும். இப்­போது மேட ராசியில் சூரியன் இருக்கும் போது பூராடம் நட்­சத்­தி­ரத்தில் வக்கி­ர­ம­டைந்­துள்ள சனி கன்னி ராசியில் சூரியன் வரும் போது பூராடம் 2ஆம் பாதத்தில் வக்ர நிவர்த்தி அடை­கிறார். சனி பகவான் ஆயுள் காரகன், தொழில் காரகன். சனிதான் நீதி,நேர்மை,தெய்­வீக ஞானத்­துக்கும் அதி­பதி. ஒருவன் சுறு­
சு­றுப்­பாக செயல்­ப­டு­வ­தற்கும் சோம்­பே­றி­யாக தூங்­கு­வ­தற்கும் காரணம் அவன் ஜாத­கத்தில் உள்ள சனியின் பலமே ஆகும். 
சனி பெயர்ச்­சியால் பாதிப்பு ஏற்­பட்ட ராசி­யி­ன­ருக்கு வக்கிர காலத்தில் தொழிலில் இருந்து வந்த பாதிப்­புகள் குறையும். பணக்­கஷ்டம் தீரும். கடு­மை­யான நெருக்­க­டியில் இருந்து வந்­த­வர்­க­ளுக்கு ஒரு நிம்­மதி கிடைக்கும் கால­மாக இந்த மாதங்கள் அமையும். சனி வக்கி­ரத்­தினால் பாதிப்பு குறைய சனிக்­கி­ழ­மை­யன்று எள் தீபம் ஏற்றி வழி­ப­டலாம். மே முதல் செப்டெம்பர் வரை நான்கு மாத காலம் சனி­ப­கவான் வக்­கி­ர­மாக செல்­வ­தனால் 12 ராசிக்­கா­ரர்­க­ளுக்கும் ஏற்­படும் பலன்­களைப் பார்க்­கலாம்.
மேடம் சனி­ப­க­வானால் உங்­க­ளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நன்­மையே அதிகம் நடக்­கி­றது. புதிய வேலை கிடைக்கும். சுப­கா­ரி­யங்­களால் மனதில் மகிழ்ச்சி அதி­க­ரிக்கும். திரு­மணம் நடை­பெறும், குழந்தை பாக்­கியம் இல்­லா­த­வர்­க­ளுக்கு நல்ல செய்தி வரும். நண்­பர்­களால் நன்­மைகள் அதிகம் நடக்கும். கோவில்­க­ளுக்கு ஆன்மிக பயணம் செல்­வீர்கள். நோய் பாதிப்­பு­களால் சில­ருக்கு அறுவை சிகிச்­சைகள் செய்ய வேண்­டி­யி­ருக்கும். பற்கள் பாதிக்­கப்­பட்டு பிடுங்க வேண்­டி­யி­ருக்­கலாம்.  நன்­மைகள் அதிகம் நடை­பெறும் காலம் என்­பதால் வெற்றி நடை போடுங்கள்.
ரிஷபம் 
அஷ்­ட­மத்து சனி ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்டு இருந்­தது. நான்கு மாத காலம் கொஞ்சம் நிம்­மதி பெரு­மூச்சு விடுங்கள். சனியின் சஞ்­சா­ரத்­தினால் வேலை­­ இல்லா­த­வர்­க­ளுக்கு வேலை கிடைக்கும். பணப்­பு­ழக்கம் அதி­க­ரிக்கும். மதிப்பும் மரி­யா­தையும் கூடும். புதிய செயல்­களை செய்யும் போது எதையும் ஒரு­மு­றைக்கு இரு­முறை யோசித்து செய்­யுங்கள். வேலைப்­பளு அதி­க­ரிக்கும். கோவில்­க­ளுக்கு சென்று இஷ்ட தெய்­வங்­களை வழி­ப­டு­வதன் மூலம் கஷ்­டங்கள் காணாமல் போகும். ஆரோக்­கி­யத்தில் அக்­கறை காட்­டுங்கள். காதல் விவ­கா­ரங்கள் கை கூடும். திரு­மணம் நடை­பெறும். தேவை­யில்­லாத ஆடம்­பர செல­வு­களை தவிர்த்து விடுங்கள்.
மிதுனம் 
 இந்த நான்கு மாத காலம் நிம்­ம­தி­யாக இருங்கள். உடம்­பிலும் மன­திலும் உற்­சாகம் அதி­க­ரிக்கும். சுறு­சு­றுப்­பாக வேலை செய்­வீர்கள். காதல் கைகூடும். வீட்டில் சுப காரி­யங்கள் நடை­பெறும். வேலை மாற்றம் ஏற்­படும். யோசித்து செயல்­ப­டுங்கள். இருக்­கி­றதை விட்­டுட்டு பறக்­கி­ற­துக்கு ஆசைப்­ப­டா­தீர்கள். பொன், பொருள், ஆடை ஆப­ரண சேர்க்கை ஏற்­படும். உல்­லாச பயணம் செல்­வீர்கள். சுப விரயம் ஏற்­படும். பிள்ளை இல்­லையே என்று கவ­லைப்­பட்­ட­வர்­களின் மனக்­க­வலை தீரும். ஆன்­மிக பயணம் மன­திற்கு அமை­தியை தரும்.
கடகம்
 சனி­பெ­யர்ச்சி உங்­க­ளுக்கு அதிர்ஷ்­டத்தை அள்­ளிக்­கொ­டுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது. சனி வக்கி­ர­மாகும் இந்த கால கட்­டத்தில் சொந்த வீடு, வண்டி வாக­னங்கள் வாங்­கலாம். சக ஊழி­யர்­களால் நன்­மைகள் அதிகம் நடை­பெறும். வேலை செய்யும் இடத்தில் சில 
வில்­லங்கம் வரும் கவனம் தேவை. குழந்­தை­களால் சுப விரயம் ஏற்­படும். சனி­ப­க­வானை சனிக்­கி­ழ­மை­களில் எள் தீபம் ஏற்றி வணங்­கலாம்.
சிம்மம்
 குடும்­பத்தில் இருந்த பிரச்­சி­னைகள் தீரும். உல்­லாச பய­ணங்­க­ளினால் மனதில் நிம்­மதி அதி­க­ரிக்கும். உழைப்­பிற்­கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு இலாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்­த­வர்­களால் நன்­மைகள் நடை­பெறும். உற­வி­னர்­களால் இருந்து வந்த உபத்­தி­ர­வங்கள் நீங்கும். சின்­னச்­சின்ன மனக்­க­சப்­புகள் நீங்கி குடும்­பத்தில் ஒற்­றுமை பிறக்கும்.
கன்னி 
அர்த்­தாஷ்­டம சனியால் ஆட்­டிப்ப­டைக்­கப்­பட்­டி­ருந்த நீங்கள் இந்த நான்கு மாத காலத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்­பீர்கள். கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்­க­ளுக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்­சி­க­ர­மா­ன­தாக இருக்கும். பணப்­பு­ழக்கம் தாரா­ள­மாக இருக்கும். தடைப்­பட்டு வந்த சுப­கா­ரி­யங்கள் நடை­பெறும். சில­ருக்கு படிப்பு, வேலைக்­காக வெளியூர் வெளி­நாடு செல்லும் யோகம் அமையும். காதல் விவ­கா­ரங்­களால் மனதில் மகிழ்ச்­சியும் உற்­சா­கமும் அதி­க­ரிக்கும்.
துலாம் 
கடன் கொடுத்து பணத்தை தராமல் இழுத்­த­டித்­த­வர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்­பார்கள். எதிர்­பா­ராத பண­வ­ரவு மனதில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும். புதிய முயற்­சி­களில் தடைகள் ஏற்­பட வாய்ப்பு உள்­ளது. கவனம் தேவை. உடல் உழைப்பு கூடும்.  வாக­னங்­களில் செல்லும்போது கவ­னமும் எச்­ச­ரிக்­கையும் தேவை. காத­லிப்­ப­வர்­க­ளுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான். தடை­களை தாண்டி முன்­னே­று­வீர்கள். வியா­ழக்­கி­ழ­மை­களில் ஆஞ்­ச­நே­ய­ருக்கு வெற்­றிலை மாலை சாற்றி வழி­பட நன்­மைகள் நடை­பெறும்.
விருச்­சிகம் 
ஏழரை சனியில் பாத சனி நடை­பெ­று­கி­றது. உடல் நிலையில் பாதிப்பு அதிகம் இருந்­தது. இந்த நான்கு மாத காலம் உடல் நிலை­ பா­திப்­புகள் சற்று குறைய வாய்ப்பு உள்­ளது. தேவை­யற்ற முத­லீ­டு­களை தவிர்க்­கவும். அம்­மாவின் உடல் நலனில் அக்­கறை செலுத்­துங்கள். தேவை­யற்ற விட­யங்­களில் தேவை­யில்­லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். வேலை­களில் இழு­பறி ஏற்­படும். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்­சி­னைகள் ஏற்­படும். அவ­ச­ரப்­பட்டு வேலையை விட்டு விட வேண்டாம்.
தனுசு 
ஜென்ம சனி காலம் நெருக்­கடி மிகுந்த கால கட்­டங்­களை எல்லாம் தாண்டி வந்­தி­ருப்­பீர்கள். உற­வி­னர்கள், நண்­பர்­க­ளுடன் இதுநாள் வரை இருந்து வந்த மன­வ­ருத்­தங்கள் நீங்கும். புதிய சொத்­துக்கள்,  வாக­னங்கள் வாங்­கு­வீர்கள். பெண்கள் ஆடைகள்,  நகைகள் வாங்­கு­வீர்கள். அடிக்­கடி வெளியூர் பயணம் ஏற்­படும். மாண­வர்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் படிக்க வாய்ப்பு அமையும். திரு­மணம் கை வரும்.
மகரம் 
சனி பகவான் உங்கள் ராசி நாதன். ஏழரை சனி தொடங்­கி­யுள்­ளது. வீட்டில் சுப நிகழ்ச்­சிகள் நடை­பெறும். மனதில் மகிழ்ச்­சியும் உற்­சா­கமும் ஏற்­படும் . பண­வ­ரவு அதி­க­ரிக்கும் கூடவே செல­வு­களும் எட்­டிப்­பார்க்கும். விரய செல­வு­களை தவிர்த்து சுப செல­வு­க­ளாக மாற்­றுங்கள். திரு­மணம் கைகூடும் .  குழந்தை பாக்­கியம் கிடைக்கும். சனி பக­வா­னுக்கு எள் தீபம் ஏற்றி வணங்­குங்கள்.
கும்பம்
 சனி பகவான் உங்கள் ராசி நாதன். மாண­வர்­க­ளுக்கு நல்ல எதிர்­காலம் அமையும். சில­ருக்கு வேலை மாற்றம் ஏற்­படும். வீடு மாற வாய்ப்பு உள்­ளது. புதிய வாகனம் வாங்­கு­வீர்கள். சுய தொழில் செய்­ப­வர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஊதியம் குறைவாகவே இருக்கும். பொறுமை அவசியம்.
மீனம் 
சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வக்கிர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள். உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் ஏற்படும். தடைகள் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். 
சனி வக்கிரம் - யாருக்கெல்லாம் நன்மை?, யாருக்கெல்லாம் தீமை?: பரி­காரங்கள் இதோ..! 1

Back to top button