செய்திகள்

பிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழர்கள் பலர் கைது

கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது 11 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உடப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது புத்தளம் நகரில் வைத்து புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
பின்னர் இவர்களை நேற்று மாலை புத்தளம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் பத்து வயதான சிறுவனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்ற ஒருவரும் இருந்ததாக விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழர்கள் பலர் கைது 1

பிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழர்கள் பலர் கைது 2

Back to top button