செய்திகள்

சிங்கள மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய ஈழத்துப்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்; சோகமயமான மடு!

யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற நிலையில் உயிரிழந்தார் மன்னார் தட்சணா மருதமடுவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவியான கைலாசபிள்ளை ஹேமா என்ற வயது-28 பெண்.
இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன, இத்தருணத்தில்தான் குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது மட்டுமில்லாமல் தென்னிலங்கை மக்களையும் கண்ணீர் சிந்த வைத்தது.
இந் நிலையில், நேற்று குறித்த பெண்ணின் இறுதிக்கிரிகைகள் தட்சனா மருதமடுவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, அப்பகுதி இந்து மயானத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வீதியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கள மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய ஈழத்துப்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்; சோகமயமான மடு! 1

Back to top button