செய்திகள்

ஆட்டிப் படைக்கும் ஏழரை சனி இந்த வாரம் எந்த ராசியை குறி வைத்திருக்கிறார் தெரியுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

ஜோதிடத்தின் மூலம் நம்முடைய குணநலன்களை கணிக்க முடியும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஜோதிடம் என்பது சில சமயம் சிலரால், பல விமர்சனங்கள் வைக்கப்படும்.
ஜாதகத்தை பொறுத்தவரை அனைத்தையும் விட முக்கியமானது நாம் பிறந்த ராசியாகும். ஏனெனில் நம்முடைய விதியை தீர்மானிப்பதில் ராசிக்கு முக்கியமான பங்குள்ளது.
இந்த வாரம் ராசிகளில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் புது கூட்டணி ஒன்று உருவாகிறது. மீனம் ராசியில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய், மிதுனத்தில் ராகு விருச்சிகத்தில் உள்ள குரு அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் தனுசு ராசியில் ஏற்கனவே சனி, கேது சஞ்சரிக்கின்றனர்.
கும்ப ராசியில் புதன், சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மகரம், கும்பம், மீனம் ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கிறார்.
மிதுனம், கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
மேஷம்
சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும், பணம் அதிகமாக மிச்சமாகும், செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா செய்து கொண்டிருக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் நீண்ட முயற்சிக்குப் பின்னர் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும்.
கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும். மாணவர்களின் கல்வி நிலை உயரும் பெண்களுக்கு வீட்டிலும் வெளியிடத்தில் அந்தஸ்து உயரும்.
வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள்.
ரிஷபம்
சூரியன் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும், வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனி நடப்பதால் சுப விரைய செலவுகள் தேடி வரும். தொழில் தொடங்க வேண்டாம்.
வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் வீடு பூமி யோகம் உண்டாகும் இரண்டில் உள்ள ராகுவை அதிசாரத்தில் செல்லும் குருவும் சனீஸ்வரன் பார்ப்பதால் வாக்கில் கவனம் தேவை. கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் கவனத்தை படிப்பில் செலுத்தவும். பெண்களுக்கு உடலில் அசதி ஏற்படும்.
பெருமாள் கோவிலுக்கு சென்று புதன்கிழமைகளில் விளக்கு போடுங்கள் நன்மை ஏற்படும்.
மிதுனம்
சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருக்கிறார் நன்மைகள் அதிகரிக்கும் தொழிலில் வெற்றி உண்டாகும். சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும்.
மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் கூடும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் மத்தியில் சாதகமாக இல்லை. மனதில் குழப்பம் ஏற்படும். ராசியை குரு பார்ப்பதால் சுபிட்சம் கிடைக்கும் திருமணம் புத்திர பாக்கியமும் பதவி உயர்வு தருவார்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயரும் பெண்களுக்கு புது வேலை வாய்ப்பு அமையும்.
புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.
கடகம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் சாதகமாக இல்லை என்பதால் கவனம் தேவை. செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும்.
குரு பகவானும் கேதுவும் இணைந்து ஆறாம் வீட்டில் உள்ளதால் மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும் மனைவி சொல்வதை கணவர் கேட்க வேண்டும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
தானம் தர்மம் செய்யவும் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு உடை வாங்கித் தரவும்
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் வேலையில் மனம் ஈடுபாடு இருக்காது. செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழில் நிலையில் மேன்மை நிலை உருவாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், குரு நான்காம் இடத்தில் இருந்து அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சிறு பயணங்களால் நன்மை உண்டாகும்.
கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும் முன்கோபத்தைத் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.
செவ்வாய்கிழமைகளில் ராகுகாலத்தில் துர்க்கையை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கன்னி
சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் அமர்ந்து சம சப்தம பார்வையாக பார்க்கிறார். அரசு வேலைக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வண்டி வாகனங்களை சரி செய்து கொள்ளுங்கள்.
ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
ஞாயிறு கிழமைகளில் விநாயகப்பெருமானுக்கு மாலை அணிவித்து வணங்கவும்.
துலாம்
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். கண் நோய்களை கவனமாக கையாளுங்கள். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் மனதில் உற்சாகம் பிறக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வண்டி வாகனங்களில் கவனமாக இருக்கவும்.
நெருப்பு, மின்சார விசயங்களில் எச்சரிக்கை தேவை. புதன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பங்கு வர்த்த முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மாணவர்கள் கல்வித்தரம் உயரும்.
படித்து வேலை செய்யும் இளம் வயதினருக்கு திருமண யோகமும் குழந்தைகளுக்காக ஏங்கி தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்விகாக எழுதும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க துறையிலும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வும் சிறப்பாக இருக்கும். திருமண யோகமும் பூமி யோகம் கூடி வரும்.
புதன்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும், நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படும். புதன் சுக்கிரன் உடன் இணைந்து நான்காம் வீட்டில் இருப்பதால் தாய்மாமன் உதவி கிடைக்கும்.
வாகன யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டா வாதம் செய்யாதீர்கள்.
கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு
சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும், உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தினரால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும்.
மகரம்
சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமண யோகம் கூடி வரும். வீட்டில் லட்சுமி கடாட்ச யோகம் வந்து விட்டது. எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பொன் நகைகளை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் பிறக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரம் துர்க்கை அம்மனை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கும்பம்
சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து விடும். செவ்வாய் நான்காமிடத்தில் இருப்பதால் வீடு நிலம் வகையில் முதலீடு செய்வீர்கள் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் போது தாய் மனைவி பெயருக்கு பத்திரம் சேர்த்து எழுத வேண்டும்.
புதன் உங்கள் ராசியில் சுக்கிரன் உடன் இணைந்து அமர்ந்திருப்பதால் முக வசீகரம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களின் மதிப்பு மரியாதை சமூகத்தில் கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மீனம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் இருப்பதால் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளதால் மனதில் நிம்மதி அதிகரிக்கும். திருமணபாக்கியம் புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடிவரும் அதன் மூலமாக வருமானம் அதிகரிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது.
கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் எளிமையாக நிறைவேறும்.
ஆட்டிப் படைக்கும் ஏழரை சனி இந்த வாரம் எந்த ராசியை குறி வைத்திருக்கிறார் தெரியுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் 1

Back to top button