ஆன்மிகம்

வைகாசி மாத ராசி பலன்கள்: வரும் நாட்களில் எந்த ராசிகாரர்களுக்கு நன்மை தீமை…?

சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம்.
அந்தவகையில் வைகாசி மாதம் யாருக்கு எல்லாம் நன்மை,தீமை என்று பார்ப்போம்.
மேஷம்
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும், அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும்
செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும், சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 4ஆம் தேதி முதல் வாக்கு வன்மை அதிகரிக்கும்.
குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும், உறவினர்களுக்கு கடன் கொடுத்து உதவுவீர்கள்.
சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், 21ஆம் தேதிக்குப் பின்னர் வீட்டில் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டும், படிப்பில் அதிகமான கவனம் செலுத்துவது நல்லது.
ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சலனம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும், அப்பாவினால் நன்மை உண்டாகும்.
செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பணம் கிடைக்கும், குடும்பத்தில் பிரச்சினையை தவிர்ப்பது நல்லது.
புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், 4ஆம் தேதிக்குப் பின்னர் புத்திசாலித் தனம் அதிகரிக்கும்.
குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும், பண வரவு சரளமாக இருக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 21ஆம் தேதிக்குப் பின்னர் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும், வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கடுமை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்
சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு செலவுகள் செய்யும் நிலை உண்டாகும், அரசாங்கத்திற்க்கு செலுத்த வேண்டிய வரிவகைகளை செலுத்திவிடுவது நல்லது.
செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும், வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியதெல்லாம் எளிதில் நிறைவேறும், 4ஆம் தேதிக்குப் பின்னர் தொழில் வகையில் முதலீடுகள் அதிகரிக்கும்.
குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் நலனில் கவனம் தேவை, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 21ஆம் தேதிக்குப் பின்னர் செலவுகள் அதிகரிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும், நண்பர்களால் உதவி கிடைக்கும்.
ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் வலி உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை உண்டாகும்.
கடகம்
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகமாகும், வெளியூர் பிரயாணம் நல்ல பயனைத் தரும்.
புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் தாய் மாமனின் உதவி கிடைக்கும் 4ஆம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.
குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் விஷயங்களில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் 21ஆம் தேதிக்குப் பின்னர் பண வருமானம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை உண்டாகும், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விரயங்கள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகள் மூலம் நன்மை உண்டாகும், லாபம் அதிகரிக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கல்லூரி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 4ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் சூடு பிடிக்கும்.
குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், புதிதாக வாகனங்கள் வாங்குவீர்கள்.
சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் 21ஆம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும்.
ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பது நடக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடன்கள் எல்லாம் திரும்ப செலுத்திவிடுவீர்கள்.
கன்னி
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்து வரும் தொழிலில் மேன்மை நிலையை அடையும், தொழில் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும்.
செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், எல்லா செயல்களும் சிறப்படையும்.
புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது 4ஆம் தேதியிலிருந்து தாய் மாமன் அனைத்து வகையிலும் உதவுவார்.
குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இப்பொழுது அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், அக்கம்பக்கத்தாரின் ஆதரவு கிடைக்கும்.
சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் சங்கடம் ஏற்படும் 21ஆம் தேதிக்குப் பின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்குவீர்கள், வாகனங்களை பராமரிப்பு செய்து கொள்வீர்கள்.
ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை செப்பனிட்டுக் கொள்வீர்கள்.
துலாம்
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் நிலையற்ற தன்மை ஏற்படும், அப்பாவின் கோபத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும்.
செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் 4ஆம் தேதிக்குப் பின்னர் படிப்பில் கவனமாக இருந்துகொள்வது நல்லது.
குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சினில் அன்பு அதிகரிக்கும், வருமானம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருக்கிறார் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும் 21ஆம் தேதிக்குப் பின்னர் பணம், நகைகளை பத்திரப்படுத்தவும்.
சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும், அடிக்கடி கனவு வரும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்வீர்கள்.
விருச்சிகம்
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த பணிகள் சிறக்கும்.
செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம், மருந்து மாத்திரைகளை சரிவர சாப்பிட வேண்டும்.
புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்க்காக கடன் வாங்குவீர்கள் 4ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும்.
குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும்.
சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும் 21ஆம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும், பண வரவில் தடை உண்டாகும்.
ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பணப் புழக்கம் சரளமாக இருக்கும்.
தனுசு
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு உண்டாகும், உத்தியோகத்தில் தொல்லை ஏற்படும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும்.
புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் 4ஆம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனால் தொல்லை உண்டாகும்.
குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், சில விலையுயர்ந்த பொருட்கள் தொலைந்துவிடும்.
சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப்பயணம் செல்லும் நிலை உண்டாகும், 21ஆம் தேதிக்குப் பின்னர் மனைவியுடன் சச்சரவு உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும், நன்றாக ஓய்வு எடுப்பீர்கள்.
ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத விரக்தி தோன்றும்.
மகரம்
சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும், குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும், கூர்மையான பொருட்களால் காயம் ஏற்படலாம்.
புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 4ஆம் தேதிக்குப் பின்னர் வேறு கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும்.
குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் பண வரவு அதிகரிக்கும், நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகு படுத்தும் பணியை தொடங்குவீர்கள் 21ஆம் தேதிக்குப் பின்னர் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் உண்டாகும், அலைச்சல் அதிகரிக்கும்.
ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம்
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும், புதிதாக வீடு வாங்குவீர்கள். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும், கணிதத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் 4ஆம் தேதிக்குப் பின்னர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும், பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள், 21ஆம் தேதிக்குப் பின்னர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நடக்கும், தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் நிறைவேறும்.
மீனம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும், தொழிலுக்காக அடிக்கடி வெளியூர் செல்வீர்கள்.
செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாய பணிகளுக்காக இயந்திரங்கள் வாங்குவீர்கள், உஷ்ணத்தின் காரணமாக அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்படும்.
புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள் 4ஆம் தேதிக்குப் பின்னர் இடமாற்றம் உண்டாகும்.
குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், எதிர்பார்த்த வகையில் பணம் கிடைக்கும்.
சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முகத்தில் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் 21ஆம் தேதிக்குப் பின்னர் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும்.
சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், முயற்சிகள் வெற்றியடையும்.
ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வீட்டை ரிப்பேர் செய்து பராமரிக்கும் நிலை உண்டாகும்.
கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், செயல்கள் எல்லாம் சிறப்படையும்.வைகாசி மாத ராசி பலன்கள்: வரும் நாட்களில் எந்த ராசிகாரர்களுக்கு நன்மை தீமை...? 1

Back to top button